PDF chapter test TRY NOW

இப்பகுதியில் மின் கடத்துப் பொருள்கள் அதாவது நற்கடத்திகள் மற்றும் காப்பான்கள் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
பொதுவாக மின்னோட்டம் கடத்தும் பண்பின் அடிப்படையில் பொருட்களை, இரண்டு வகையாக வகைப்படுத்தலாம் அவைகள் முறையே
  • மின்கடத்துப் பொருள்கள் அல்லது நற்கடத்திகள்
  • காப்பான்கள் அல்லது மின்கடத்தாப் பொருள்கள் அல்லது அரிதிற் கடத்திகள்
கட்டுறா எலக்ட்ரான்கள்
 
ஒரு பொருளில் வெவ்வேறு அணுக்களின் எலக்ட்ரான்கள் அணுக்களை சுற்றி இயங்க வெவ்வேறான கூட்டின்மை எண் வீதத்தைப் கொண்டிருக்கும். உலோகங்களைப் போன்ற சில பொருள்களில் அணுக்களின் வெளிக்கூட்டு எலக்ட்ரான்கள் தளர்வாக பிணைக்கப்பட்டுள்ளது, மேலும் எலக்ட்ரான்கள், அப்பொருட்களின் அணுக்களுக்கிடையில் ஒழுங்கற்ற முறையில் சுற்றி வரும் ஏனெனில், இந்த அசாதாரண எலக்ட்ரான்கள் தன்னுடனான அணுக்களை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் அணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் சுற்றிவரும், அவை பெரும்பாலும் கட்டுறா எலக்ட்ரான்கள் என அழைக்கப்படுகின்றது.
 
ஒரு கம்பி வடிவிலான உலோகத்தை எடுத்து கொள்வோம். ஒரு உலோகத்தின் இரு முனைகளுக்கு இடையே மின்னழுத்தம் அளிக்கப்படும் போது மின்னழுதத்தினால் கட்டுறா எலக்ட்ரான்கள் ஒரே திசையில் இயக்கப்படுகின்றது.
 
ironrods47481019201w1920.jpg
உலோக கம்பி
  • ஓர் நற்கடத்தியானது அதிக எண்ணிக்கையிலான கட்டுறா எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.
  • அரிதிற் கடத்திகள் என்பது, கட்டுறா எலக்ட்ரான்களைக் கொண்டிராதப் பொருள்கள், மின்னோட்டத்​தை நன்கு கடத்தாது. இவை மின்னோட்டத்தைக் கடத்தா அரிதிற் கடத்திகள் ஆகும்.
கடத்திகள்
தளர்வாக பிணைக்கப்பட்ட எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களால் ஆன பொருள்கள் கடத்திகள் எனப்படும்.
YCIND18072022_4003_Electricity_07.png
குறைந்த மின் கடத்து திறன் கொண்ட கடத்தி
 
ஒரு கடத்திக்கு வெளிமின்னழுத்தம் அளிக்கப்படும்போது, அம்மின்னூட்டத்தின் இயக்கத்திற்கு மிகக் குறைந்த மின்தடையை அக்கடத்திகள் அளிக்கின்றது.
 
gateway31305951920w1920.png
உலோகத்தாலான கதவு
 
ஒரு கடத்தியில் மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும். ஓர் நற்கடத்தியானது மிக அதிக மின் கடத்துத்திறன் கொண்டதாக இருக்கும்.