PDF chapter test TRY NOW
இப்பகுதியில் மின் காப்பான்களைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
போதுமான கட்டுறா எலக்ட்ரான்களைப் பெறாத பொருள்கள் நற்கடத்திகள் இல்லை. அவை, காப்பான்கள் அல்லது அரிதிற் கடத்திகள் எனப்படும்.
அதிக மின் தடை கொண்ட கட்டுறா எலக்ட்ரான்கள்
- மின்கடத்தாப் பொருள்கள் அல்லது அரிதிற் கடத்திகள் மின்னூட்டம் அதாவது எலக்ட்ரான்கள் பாய்வதற்கு அதிக மின்தடையைக் ஏற்படுதுகின்றது
- ஒரு பொருள்களின் மின்கடத்தித் திறனானது, கட்டுறா எலக்ட்ரான்களின் எண்ணிக்கையையும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் சார்ந்து தான் இருக்கும்.
மரக்கட்டை (காப்பான்)
நாம் அதிகமாக பயன்படுத்தும் இரப்பர் அதாவது அழிப்பான் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிப்பது இல்லை. எனவே, இரப்பர் ஒரு அரிதிற் கடத்தி ஆகும்.
பெரும்பாலான உலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கின்றன. அதேசமயம், பெரும்பாலான அலோகங்கள் மின்னோட்டம் தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.
Important!
உங்களுக்குத் தெரியுமா?
தாமிரத்தாலான மின் கடத்திகள், மிகக் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக, தான் தாமிரக் கம்பிகள் வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்துகின்றன. இவ்வகைக் கம்பிகள் அதிக மின் தடையைக் கொண்டுள்ள பொருட்களால் சூழப்பட்டு இருக்கும். இந்தப் பொருட்கள் பொதுவாக நெகிழ்வான பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன.