PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு நீர்மம் திண்மாக மாறும் நிகழ்வு உறைதல் அல்லது திண்மமாதல் எனப்படும்.
Example:
பனிக்கட்டியாக மாறுதல்.
குளிர்சாதன பெட்டியின் அதிக குளிர் பகுதியில் வைக்கப்பட்ட நீர் மேலும் குளிர்ந்து, உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது. இந்நிகழ்வில் திரவ நிலையில் இருந்து திண்ம நிலைக்கு மாறுவதைத் தவிர வேறெந்த மாற்றமும் நிகழ்வதில்லை, வேறெந்த புதிய பொருளும் உருவாவதில்லை. எனவே, உறைதல் என்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
நீர், பனிக்கட்டி
உறைதல்
ஒரு திரவத்தினை குளிர்விக்கும் பொழுது, அதன் துகள்கள் ஆற்றலை இழந்து அதனால் அதிர்வடைவதன் வேகமும் குறைகிறது. துகள்களுக்கு ஆற்றல் குறைவாக இருப்பதால் அவை ஒன்றையொன்று அதிகமாய் ஈர்த்து, நெருங்கி வர வாய்ப்புள்ளது. எனவே, அத்துகள்களின் நகர்தலும் குறைவாகவே இருக்கிறது.
நீர் உறைந்து பனிக்கட்டியை உருவாக்குகிறது
Example:
திரவ நிலையிலுள்ள நீர் க்கு குளிர்விக்கப்படும்பொழுது, அது உறைந்து பனிக்கட்டியாகிறது. உறைநிலையை அடைந்தவுடன் அனைத்து திரவமும் உறைந்து திண்ம நிலையை அடைகிறது.