PDF chapter test TRY NOW
ஆவியாதல் என்பது ஒரு திரவப் பொருள் இயல்பு நிலையிலிருந்து ஆவி நிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும்.
ஆவியாதலின் இரு வகைகள்,
- கொதித்தல்
- ஆவியாதல்
i. கொதித்தல் / ஆவியாக தயாராக இருத்தல்:
கொதித்தல் என்பது எந்த வெப்பநிலையில் திரவத்தின் ஆவி அழுத்தமானது அதன் மீது செயல்படும் வளிமண்டல அழுத்தத்திற்குச் சமமாக இருக்கிறதோ அந்த வெப்பநிலையில் திரவமானது வேகமாக ஆவியாகிறது இந்த நிகழ்வே கொதித்தல் என்று அழைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் திரவம் வெப்பத்தினை ஏற்று வாயுநிலைக்கு செல்கிறது. வாயு நிலையில் உள்ள மூலக்கூறுகளின் அமைப்பு மட்டுமே மாற்றம் அடைகிறது ஆனால் வேதியியல் பண்புகளில் மாற்றம் ஏற்படதில்லை ஆகையால் கொதித்தல் என்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
ஒரு திரவத்தினை வெப்பப்படுத்தும்பொழுது, அதன் துகள்கள் அதிக ஆற்றலைப் பெற்று வேகமாக அதிர்வடைகிறது. பின் போதிய ஆற்றலைப் பெற்றவுடன் துகள்கள் தன்னிடையே உள்ள ஈர்ப்பு விசையினைத் எதிர்கொண்டு ஒன்றையொன்று விலக்கி தனித்தனியே ஒழுங்கற்றதா இடம் பெயர்ந்து வாயு நிலையினை அடைகிறது.
Example:
ஒரு கெட்டியான பாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு அதை அளவு வெப்பப்படுத்தும் போது, நீர்க்குமிழ்கள் உருவாகி திரவ நிலை உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
நீராவி
ii. ஆவியாதல்:
வெப்பத்தின் மூலம் ஒரு திரவப் பொருள் இயல்பு நிலையிலிருந்து ஆவி நிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும்.
ஆவியாதல் இயற்கையாக நிகழும் என்பதற்கான செய்முறை விளக்கம்:
ஒரு குவளையில் நீரினை எடுத்துக் கொள்ளவும் அதில் உள்ள நீர் மூலக்கூறுகள் இங்கும் அங்கும் வெவ்வேறு திசைவேகத்தில் நகர்ந்தபடி இருக்கும். சில மூலக்கூறுகள் அதிலும் குறிப்பாக நீரின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகள் திரவத்தினை விட்டு விலகியபடி எதிர்திசையை நோக்கி அதாவது காற்றினை நோக்கி நகர போதிய அளவு ஆற்றலைப் பெற்று நீரின் பரப்பு இழுவிசையினையும் தாண்டி திரவ கலனை விட்டு ஆவியாக வெளியேறுகிறது. நேரம் ஆக ஆக, கலனில் உள்ள நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது தண்ணீரின் வெப்பநிலை நீரின் கொதிநிலை அளவுக்கு உயரவில்லை கொதிப்பது போல் எந்த நீர்க்குமிழ்களும் அங்கு தோன்றாது. இதிலிருந்து ஆவியாதல் இயற்கையாகவும் நிகழும்.
ஆவியாதல் என்ற நுட்பத்தினைப் பயன்படுத்துதல்:
ஆவியாதலை பயன்படுத்தி கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை அதன் திண்மம் – திரவம் கலவையில் இருந்து பிரித்தெடுக்க முடியும். இம்முறையின் மூலம் கடல் நீரினை அதிக பரப்புள்ள நிலத்தில் சிறிதளவு கடல் நீர் பரவலாக ஊற்றப்படுகிறது. இதுவே உப்பளமாகும். இவ்வாறு செய்வதால் சூரிய வெப்பத்தால் நீர் மேல் பட்டு அதிலுள்ள நீரினை மெதுவாக ஆவியாகிறது. இறுதியில் உப்பு நிலத்தில் படிகிறது. ஒரு கரைசலில் உள்ள கரைப்பான் எந்த வெப்பநிலையிலும் அதிலுள்ள திண்மத்தை விட்டு ஆவியாகி வெளியேறும்.
Example:
ஆவியாதல் என்ற நுட்பம் துணிகளை உலர்த்துவது முதல் மீன்களை உலரவைப்பது வரை பயனளிக்கிறது.
துணிகளை உலர்த்துவது
மீன்களை உலரவைப்பது
உப்பளம்
ஆவியாதலை பாதிக்கும் காரணி:
ஆவியாதல் ஒரு மெதுவாக நடைபெறும் நிகழ்வு; மேலும் அது திரவத்தின் புறப்பரப்பில் மட்டுமே நிகழ்வதாகும்.
ஆவியாதல்