PDF chapter test TRY NOW
ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது அல்லது குளிர்விப்பதாலோ அதில் உள்ள துகள்களின் அமைப்பு விரிவடையும் அல்லது சுருங்கும் அந்தப் பொருளின் நிறையில் எந்த மாற்றமும் அடைவதில்லை. அதாவது, அப்பொருளில் அடங்கியுள்ள துகள்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை ஆனால் அத்துகள்களின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
Example:
ஒரு குவளை நீரினை வெப்பப்படுத்தும் பொழுது அதன் பருமன் அதிகரிக்கிறது, மாறாக அதே குவளை நீரினை குளிர்விக்கும்பொழுது அதன் பருமன் குறைகிறது.
துகள்களின் அமைப்பில் மாற்றம்
ஒரு சில பொருள்களில் பருமன் மாறுபாடு அடைந்தும், நிறை மாறாமலும் இருக்கும் இவ்வாறு ஏற்படும் மாற்றங்களுக்கு இயற்பியல் மாற்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.
திண்மம், திரவம் மற்றும் வாயுக்களை வெப்பப்படுத்தும் பொழுது சுருங்குதல். விரிதலையும் கடந்து வேறு சில சாத்தியக்கூறுகள் உண்டு. உருகுதல், கொதித்தல், உறைதல் மற்றும் குளிர்வித்தல் போன்ற செயல்களால் பொருளின் இயற்பியல் நிலையில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு நிகழும் மாற்றங்களை பற்றி இங்கு காண்போம்.
இயற்பியல் நிலையில் ஏற்படும் மாற்றம்:
1. திண்மம்
i. திட நிலையில் உள்ள துகள்கள் மிக நெருக்கமானவை.
ii. துகள்கள் நிலையாக முறையாக வடிவத்தைப் பெற்றிருக்கும்.
iii. துகள்கள் தங்களது நிலையான இடங்களில் இருந்து அதிர்வடையும்.
திண்மம்
2. திரவம்
i. திரவ நிலையில் உள்ள துகள்கள் நெருக்கமானவை.
ii. துகள்கள் நிலையாக முறையாக வடிவத்தைப் பெற்றிருக்காது.
iii. துகள்கள் ஒன்றன் மீது மற்றொன்று நழுவும்.
திரவம்
3. வாயு
i. வாயு நிலையில் உள்ள துகள்கள் ஒன்றும் மற்றொன்று தொலைவில் அமைந்திருக்கும்.
ii. நிலையாக முறையாக வடிவத்தைப் பெற்றிருக்காது.
iii. துகள்கள் அதிக தூரம் சுதந்திரமாக நகரும்.
வாயு
வெப்பத்தினால் பொருள்களில் ஏற்படும் விளைவு:
i. வெப்பம் அதிகரித்தல் மற்றும் வெப்பம் குறைவதினால் பொருள்களில் உருகுதல், கொதித்தல், உறைதல் மற்றும் குளிர்வித்தல் ஏற்படலாம். இந்நிகழ்வில் நிலை மாற்றம் ஏற்படும்.
ii. வெப்பம் அதிகரித்தல் மற்றும் வெப்பம் குறைவதினால் பொருட்களில் விரிவடைதலோ அல்லது சுருங்குதலோ ஏற்படலாம். இந்நிகழ்வில் பருமன் மாறலாம் ஆனால் நிறை மாற்றம் ஏற்படாது.