PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு பொருளின் வேதியியல் இயைபில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அப்பொருளின் இயற்பியல் பண்புகளில் மட்டுமே ஏற்படும் மாற்றங்களுக்கு இயற்பியல் மாற்றங்கள் என்று பெயர்.
பளபளப்பு, தகடாகும் தன்மை (நெகிழ்வுத்தன்மை) மற்றும் மெல்லிய கம்பிகளாக இழுக்கக்கூடிய பண்பு, (நீளுமை) அடர்த்தி, பாகுத்தன்மை, கரைதிறன், நிறை, பருமன் போன்றவை இயற்பியல் பண்புகளாகும்.
 
shutterstock1163484094.jpgshutterstock33107701.jpg
பளபளப்பு தன்மை, கம்பிகளாக இழுக்கக்கூடிய பண்பு  
Example:
இரப்பர் வளையம் இழுபட்டு மீண்டும் பழைய நிலையை எட்டுவதைத் தவிர வேறு புதிய பொருள் ஏதும் உருவாவதில்லை.
shutterstock_1061625692.jpg
இரப்பர் வளையம்
 
இயற்பியல் மாற்றத்தின் பண்புகள்:
 
i. புதிய பொருள்கள் ஏதும் உருவாவதில்லை மற்றும் பொருளின் வேதியியல் இயைபில் எந்தவொரு மாற்றம் நிகழ்வதில்லை.
Example:
பனிக்கட்டி உருகும் பொழுது நீர் உருவாகிறது. இம்மாற்றத்தில் பனிக்கட்டியிலும் நீரிலும் காணப்படுவது ஒரே பொருளேயன்றி வேறு எந்தவொரு பொருளும் அல்ல.
shutterstock1796209999.jpg
பனிக்கட்டி
  
ii. பொதுவாக தற்காலிகமானதும் மற்றும் மீள்தன்மை கொண்டது. 
Example:
நீரினை வெப்பப்படுத்தினால் நீராவி கிடைக்கிறது. இம்மாற்றத்தில் கிடைத்த நீராவியை குளிரவைக்கும் பொழுது மீண்டும் அதே நீரினைப் பெற இயலும்.
shutterstock1750680020.jpg
நீராவி
 
iii. பொருளின் வேதியியல் பண்புகளில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. 
Example:
தங்கத்துண்டு ஒன்றினை உருக்கும்பொழுது திண்ம நிலை தங்கம் மற்றும் திரவ நிலைத் தங்கம் இரண்டிலும் ஒரே வேதியியல் பண்புகள் கொண்ட தங்கத்துகள்களே காணப்படுகிறது.
shutterstock_220693219.jpg
தங்கம் உருகுதல்
 
iv. பொருள்களின் வண்ணம், வடிவம் மற்றும் அளவுகளில் மாற்றம் நிகழலாம்.
Example:
காகிதம் மடித்தல், காய்கறிகள் வெட்டுதல் மற்றும் பலூன் ஊதுதல் போன்ற சில இயற்பியல் மாற்றங்களான பொருள்களின் வண்ணம், வடிவம் மற்றும் அளவுகளில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுள்ளது.
shutterstock643829371.jpg
காகிதம் மடித்தல்