PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சமையல் சோடாவும் எலுமிச்சை சாறும் இணையும் வினை:
 
சமையல் சோடா என்பது சோடியம் பை கார்பனேட் மற்றும் எலுமிச்சைச் சாறு (சிட்ரிக் அமிலம்) இவ்விரண்டையும் கலக்கும்பொழுது, ஒரு வேதிவினை நடைபெற்று சோடியம் சிட்ரேட் என்ற உப்புடன் நீரும், கார்பன் டை ஆக்சைடும் வெளியேறுகிறது.
 
shutterstock174289637.jpg
எலுமிச்சை சோடா
  
மேற்கண்ட வேதிவினையை  பின்வரும் வார்த்தைச் சமன்பாடு மூலம் எழுதலாம்:
 
சோடியம் பை கார்பனேட் + சிட்ரிக் அமிலம் → சோடியம் சிட்ரேட் + கார்பன் டை ஆக்சைடு + நீர்
 
NaHCO3+C6H8O7Na3C6H8O7+CO2+H2O
 
வேதியியல் மாற்றம் நிகழத் தேவையான காரணிகள்:
 
i. பட்டாசு வெடித்தல் வேதியியல் மாற்றமாகும். சில வகை பட்டாசுகள் சுவற்றில் அடிக்கும் பொழுதும், சில வகை பட்டாசுகளை கடினமான பொருள்களை வைத்து தட்டும்பொழுதும் வெடிக்கும். எனவே அழுத்தம் தருவதன் மூலம் வேதியியல் மாற்றத்தினை உருவாக்கலாம்.
 
shutterstock1205845789.jpg
பட்டாசு வெடித்தல்
 
ii. எலுமிச்சை சாற்றினை சோடா நீரில் ஊற்றும் போது நுரைத்துப் பொங்கி கார்பன் டை ஆக்சைடு உருவாகும். இரு கரைசலும் கலக்கும் முன் நுரைத்துப் பொங்குதல் நிகழ்வதில்லை. எனவே இரு பொருள்களின் இணைதலும் வேதி மாற்றம் நிகழ போதுமானது ஆகும்.
 
shutterstock1515995369.jpg
சோடியம் சிட்ரேட்
  
iii. வேக வைக்காத அரிசி மற்றும் வேக வைத்த சாதம் இந்த இரண்டின் சுவையும் முற்றிலும் வெவ்வேறானவை. இந்த எடுத்துக்காட்டில் அரிசியுடன் தகுந்த அளவு நீரினைச் சேர்த்து, வெப்பப்படுத்தி வேகவைக்கும் பொழுது அரிசியின் தன்மையும், சுவையும் முற்றிலும் மாறிவிடுகிறது. எனவே வெப்பப்படுத்துதல் என்ற காரணியும் வேதி மாற்றம் நிகழ்த்த தகுந்தது. சமையல் என்ற நிகழ்வு வேதி மாற்றத்திற்கான காரணமாக உள்ளது.
 
shutterstock_255077293.jpg
சாதம்
 
iv. சமையலில் வனஸ்பதி பயன்படுத்தப்படுகிறது. தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன்  சேர்க்கப்பட்டு வனஸ்பதி உருவாக்கப்படுகிறது. இவ்வினையில், நிக்கல், பிளாட்டினம் அல்லது பல்லேடியம் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
shutterstock_520248964.jpg
தாவர எண்ணெய்
 
v. நீர் என்ற வேதிச் சேர்மம் எந்த காரணிக்கும் உட்படாத வரையில் நீராகவே இருக்கும். ஆனால், அந்நீரில் சில துளிகள் அமிலத்தினைச் சேர்த்து அதனை மின்னாற்பகுப்பிற்கு ஈடுபடுத்தினால், நீர் பிரிந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களாக மாறுகிறது. இதன் மூலம் வேதி மாற்றம் நிகழ மின்சாரமும் தேவை என்பதை நாம் அறியலாம். 
 
shutterstock_1832070697.jpg
மின்னாற்பகுப்பு
  
பொருள்கள் கலத்தல், வெப்பம், ஒளி, மின்சாரம், அழுத்தம் கொடுத்தல் போன்ற சில காரணிகளால் வேதி மாற்றங்களை உருவாக்க முடியும்.
குறிப்பு:
எந்த பொருளும் ஒரு வேதிவினையில் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல், வேதி மாற்றத்தின் வேகத்தினை மட்டும் துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு வினையூக்கி என்று பெயர்.
சர்க்கரையின் நொதித்திலில் ஈஸ்ட்டில் உள்ள நொதிகள் வினையூக்கியாக செயல்படுகிறது.