PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇரும்பு பொருட்கள் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து அதன் ஆக்சைடுகளாக மாறும் நிகழ்வு துரு பிடித்தல் என்கிறோம்.
இது ஒரு வேதியியல் மாற்றத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும். துருப்பிடித்தல் என்ற மாற்றம் இரும்புப் பொருள்களை பாதிப்படையச் செய்து நாளடைவில் அவற்றை மெல்ல அழித்து விடும். பாலங்கள், கப்பல்கள், கார்கள், லாரியின் பாகங்கள் போன்ற பல உறுதியான பொருள்கள் இரும்பினால் செய்யப்படுவதால், அவை துருப்பிடித்து வீணானால், பெருமளவில் பண இழப்பு ஏற்படும்.
துரு உருவாகும் முறை,
இரும்பு துருப்பிடித்தல்
இரும்பு துருப்பிடிக்க ஆக்ஸிஜன் மற்றும் நீர் (அல்லது) ஈரப்பதம் மட்டுமே போதுமானது ஒரு வேளை காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பின் துருப்பிடித்தலும் விரைவாக நிகழும்.
துருப்பிடித்தலை தடுக்கும் முறைகள்:
i. இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் ஆக்ஸிஜன், நீர், நீராவியுடன் தொடர்புறாதாவறு கவனித்துக் கொள்ள வேண்டும்.
ii. இரும்புப் பெருள்களின் மீது மெல்லிய படலமாக பெயிண்டையோ அல்லது கிரீஸையோ பூசுவது எளிய முறையாகும். இத்தகைய படலங்களை அவ்வப்பொழுது பூசுவது துருப்பிடித்தலைத் தடுக்கும்.
பெயிண்டையோ அல்லது கிரீஸையோ பூசுவது
நாக முலாம் பூசுதல்
குறிப்பு:
இந்தியாவில் \(16\) ஆம் நூற்றாண்டிலேயே துருப்பிடித்தலை தவிர்க்க உலோகத் தொழில் நுட்பத்தில் இந்திய அறிவியலாளர்கள் சிறந்து விளங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள குதூப் வளாகத்தில் \(1600\) ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு இரும்புத் தூண் உள்ளது. இவ்வளவு நூற்றாண்டுகள் கடந்தும், எந்தக் கூரையும் இன்றி புறவெளியில் உள்ள அந்த இரும்புத்தூண் துருப்பிடிக்கவில்லை.