PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அறிமுகம்:
  
நம் வாழ்வில் வேதியியல் மாற்றங்கள் மிக முக்கியமானதாகும். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் வேதியியல் மாற்றங்களால் உருவானவை.
  
வேதியியல் மாற்றம்:
வேறுபட்ட வேதியியல் இயைபுடன் சேர்ந்து புதிய பொருள் உருவாவதோ, வெப்பமோ, ஒளியோ வெளியிடப்பட்டோ அல்லது ஒரு பொருள் வேறு பொருளாக மாறுவது வேதியியல் மாற்றங்கள் எனப்படும்.
Example:
இரும்பு துருப்பிடித்தல், பால் தயிராதல், எலுமிச்சைச் சாறுடன் சமையல் சோடா ஈடுபடும் வினை, நொதித்தல்.
வேதியியல் மாற்றங்களின் பயன்கள்:
 
i. இயற்கையிலிருந்து கிடைக்கும் தாது உப்புகளில் இருந்து பல தொடர்ச்சியான வேதியியல் மாற்றங்களால் உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.
ii. தொடர்ச்சியான பல வேதியியல் மாற்றங்களினால் மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
iii. பல்வேறு வகையான வேதியியல் மாற்றங்களினால் பிளாஸ்டிக்குகள், சோப்புகள், சலவைக்கட்டிகள், வாசனைத் திரவியங்கள், அமிலங்கள், காரங்கள், உப்புகள் மற்றும் பிற பொருள்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
iv. பல்வேறு வகையான வேதியியல் மாற்றங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் ஒவ்வொரு
புதிய பொருளும் கண்டுபிடிக்கப்படுகிறது.
 
புதிய பொருள்கள் உருவாவதுடன், வேறு சில நிகழ்வுகளும் ஒரு வேதியியல் மாற்றத்தின் பொழுது நிகழ்கிறது. அவை,
  
1. வெப்பம், ஒளி அல்லது வேறு ஏதேனும் கதிர்வீச்சு வெளிப்படும்.
 
 shutterstock1205845789.jpg
 
2. ஒலி உண்டாகும்.
 
 noisepollution35839151280.png
 
3. வீசும் மணத்தில் மாற்றமோ அல்லது புதிய மணம் உருவாகும். 
 
shutterstock506343535.jpg
 
4. நிற மாற்றம் ஏற்படும்.
 
BeFunkycollage20w3264.jpg
 
5. ஏதேனும் வாயு உருவாகலாம்.
 
shutterstock_635394593.jpg
 
குறிப்பு:
பட்டாசு வெடிக்கும் பொழுது வெப்பம், ஒளி, ஒலி மற்றும் விரும்பத்தகாத வாயுக்கள் வெளியிடப்பட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். பட்டாசு வெடித்தல் என்பது வேதியியல் மாற்றமாகும். அதனால் தான் நம்மை பட்டாசுகளுடன் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
fireworks.jpg
பட்டாசு வெடித்தல்
 
பழம் மற்றும் காய்கறிகளில் நிகழும் வேதியியல் மாற்றங்கள்:
  
i. நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை நாம் உடனடியாக உண்ணாமல் வைத்திருந்தால் அவை பழுப்பு நிறமாக மாறிவிகிறது.
ii. தோல் நீக்கி நீரில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு அதே வெண்மை நிறத்தில் உள்ளதையும், மாறாக தோல் நீக்கி காற்றில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு கருமை நிறமாக மாறிவிகிறது.
iii. வெட்டி வைக்கப்பட்ட கத்திரிக்காய் கருநீலம் நிறமாக மாறியிருக்கும் நிகழ்வுகள் பழம் மற்றும் காய்கறிகளில் நிகழும் சில வேதியியல் மாற்றங்கள் ஆகும்.
 
shutterstock1888500151.jpg
ஆப்பிள் துண்டு