PDF chapter test TRY NOW

இப்பகுதியில் வெப்பநிலையை அளக்க உதவும் பாதரசம் மற்றும் ஆல்கஹாலின் பண்புகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
பாதரசத்தின் பண்புகள்:
 
shutterstock_696839992.jpg
பாதரசம்
  • பாதரசம் சீராக விரிவடைகின்றது. அதாவது, ஒரே அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் நீளத்தில் ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக இருக்கிறது.
  • பாதரசம் ஒளி ஊடுடுருவா தன்மைக் கொண்டது ஆகும்.
  • பாதரசம் பளபளப்பு தன்மைக் கொண்டது ஆகும். 
  • இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டிக் கொள்ளாது.
  • இது வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடியது ஆகும். 
  • இது அதிக கொதிநிலையும் (\(357\)\(°\)\(C\)), குறைந்த உறைநிலையும் (\(−\)\(39\)\(°\)\(C\)) கொண்டது ஆகும். எனவே வெப்பநிலைகளை அளக்க பாதரசம் பயன்படுகிறது.
ஆல்கஹாலின் பண்புகள்:  
  • ஆல்கஹால் (\(−\)\(100\)\(°\)\(C\)) க்கும் குறைவான உறைநிலையை கொண்டுள்ளது. எனவே மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படும்.
  • ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்விற்கு இதன் விரிவடையும் தன்மை அதிகமாகும்.
  • இதனை அதிக அளவிற்கு வண்ணமூட்ட முடியும். ஆதலால், கண்ணாடி குழாய்க்குள் இத்திரவத்தினை தெளிவாக காண முடியும்.