PDF chapter test TRY NOW

இப்பகுதியில் வெப்பநிலைமானியின் வகைகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
 
நாம் பொதுவாக காற்று, உடல் வெப்பநிலை, உணவு மற்றும் பல பொருள்களின் வெப்பநிலைகளை அளக்க நாம் பல்வேறு வகையான வெப்பநிலைமானிகளை பயன்படுத்துகிறோம். அவற்றில் மருத்துவ வெப்பநிலைமானியும், ஆய்வக வெப்பநிலைமானியும் பொதுவாக பயன்படுத்தப்படும் வெப்பநிலைமானிகள் ஆகும்.
 
மருத்துவ வெப்பநிலைமானி:
  • இந்த மருத்துவ வெப்பநிலைமானியானது வீடுகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மனித உடலின் வெப்பநிலையை அளக்க பயன்படுகிறன.
  • மருத்துவ வெப்பநிலைமானிகளின் குழாயினில் ஒரு குறுகிய வளைவு காணப்படும்.
  • இக்குறுகிய வளைவானது வெப்பநிலைமானியை நோயாளியின் வாயிலிருந்து எடுத்த உடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதை அக் குறுகிய வளைவு தடுக்கிறது. எனவே நம்மால் வெப்பநிலையை எளிதாக குறித்துக்கொள்ள இயலும்.
  • பாதரச இழைக்கு இருபுறமும் இரண்டு வெப்பநிலை அளவுகோல்கள் காணப்படுகின்றது.
shutterstock114040099.jpg
மருத்துவ வெப்பமானி
  • மருத்துவ வெப்ப மானியில்  ஒன்று செல்சியஸ் அளவுகோல் மற்றொன்று பாரன்ஹீட் அளவுகோல் ஆகும்.
  • பாரன்ஹீட் அளவீடானது செல்சியஸ் அளவீட்டினை விட நுட்பமானது என்ற காரணத்தினால் உடலின் வெப்பநிலையானது \(F\) (பாரன்ஹீட்)ல் அளக்கப்படுகிறது.
மருத்துவ வெப்பமானியில் குறைந்தபட்ச வெப்பநிலை என்ன?
  • மருத்துவ வெப்பநிலைமானியது குறைந்தபட்ச வெப்பநிலையாக \(35\)\(°\)\(C\) அல்லது \(94\)\(°\)\(F\) வெப்பநிலை இருக்கும்.
மருத்துவ வெப்பமானியில் அதிகபட்ச வெப்பநிலை என்ன?
  • அதிகபட்ச வெப்பநிலையாக \(42\)\(°\)\(C\) அல்லது \(108\)\(°\)\(F\). வெப்பநிலையும் அளக்கக்கூடியதாக இருக்கும்.
மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
  • வெப்பநிலைமானியினைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கிருமிநாசினி திரவத்தினால் நன்கு கழுவ வேண்டும்.
  • பாதரச மட்டத்தினை கீழே கொண்டு வருவதற்காக வெப்பநிலைமானியை ஒரு சில முறை உதற வேண்டும்.
  • அளவிடத் தொடங்கும் முன் பாதரச மட்டமானது \(35\)\(°\)\(C\) அல்லது \(94\)\(°\)\(F\) கீழ் இருக்க வேண்டும்.
  • வெப்பநிலைமானியின் குமிழ் பகுதியில் வெப்பநிலைமானியை பிடிக்கக் கூடாது.
  • உங்கள் கண்ணிற்கு நேராக பாதரச மட்டத்தினை வைத்து பிறகு அளவீட்டினை எடுக்க வேண்டும்.
  • வெப்பநிலைமானியினைக் கவனமாக கையாள வேண்டும். கடினமான பரப்பில் வெப்பநிலைமானி மோதினால் அது உடைந்து விடும்.
  • வெப்பநிலைமானியினை எரியக்கூடிய பொருள்களுக்கு அருகிலோ அல்லது நேரடியாக சூரிய ஒளியின் கீழோ வைக்கக்கூடாது.
மருத்துவ வெப்பநிலை மானியைக் கொண்டு எவ்வாறு நமது உடலின் வெப்பநிலையைக் கண்டறிவது என்பதை ஒரு செயல்பாடு மூலம் அறிந்துக் கொள்வோம்.
 
உங்கள் உடலின் வெப்பநிலையினை கணக்கிடுதல்:
 
temp measurement.jpg
வெப்பநிலையை அளவிடுதல்
  • கிருமிநாசினி திரவத்தினைக் கொண்டு முதலில் நாம் வெப்பநிலைமானியினை கழுவிக் கொள்ள வேண்டும்.
  • வெப்பநிலைமானியின் முனையினை நன்கு கையில் பிடித்துக்கொண்டு சிலமுறை உதற வேண்டும்.
  • பின்பு இந்த செயல் மூலம் பாதரசமானது கீழ்மட்டத்திற்கு இறங்கும். அதாவது, அதன் மட்டமானது \(35\)\(°\)\(C\) \((95\) \(°\) \(F)\) க்கு கீழ் உள்ளதா என்பதனை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது வெப்பநிலைமானியினை நமது நாக்கிற்கு அடியிலோ அல்லது தோள்பட்டைக்கு அடியிலோ வைக்க வேண்டும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு வெப்பநிலைமானியினை எடுத்து அளவீட்டினை குறித்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் உடலின் வெப்பநிலை எவ்வளவு ?
 
\(38\)\(°\)\(C\) / \(100.4\)\(°\)\(F\)
Important!
அவரவர் உடல் வெப்பநிலை மாறுபடும் அனைவரின் உடல் வெப்பநிலையும் ஒரே மாதிரி இருக்காது. 
மனிதர்கள் வெவ்வேறு உடல் வெப்பநிலையினை பெற்றுள்ள போதிலும் அவர்களின் சராசரி உடல் வெப்பநிலை \(37\)\(°\)\(C\) \( (98.6\)\(°\)\(F)\) ஆகும். மேலும் ஒவ்வொருவரும் ஒரே மதிப்பிலான வெப்பநிலையினை நாள் முழுவதும் பெற்று இருப்பதில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு ஏற்பவும் புற சூழலுக்கு ஏற்ப நமது உடல் வெப்பநிலையானது நாள் முழுவதும் சிறிது உயர்வதும் தாழ்வதுமாக உள்ளது.