PDF chapter test TRY NOW
இப்பகுதியில் வெப்பநிலையின் அலகுகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
பொதுவாக வெப்பநிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் முறையே
- செல்சியஸ்
- பாரன்ஹீட்
- கெல்வின்
செல்சியஸ்:
வானியலாளர் ஆண்டர்ஸ் செல்சியஸ் என்பவர் வெப்ப நிலையை அளக்க ஒரு அளவுகோலை உருவாக்கினார். அவரின் நினைவாக தான் அந்த அளவு முறைக்கு செல்சியஸ் அளவு கோல் என்று பெயரிடபட்டது. பொதுவாக செல்சியஸ் அலகானது \(°C\) என எழுதப்படுகிறது.
செல்சியஸ் அளவீடு
Example:
\(20\) \(°\)\(C\) எனில், இதை இருபது டிகிரி செல்சியஸ் என படிக்க வேண்டும். செல்சியஸ் அலகானது சென்டிகிரேட் எனவும் அழைக்கப்படுகிறது.
பாரன்ஹீட்:
டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட் என்பவர் பாரன்ஹீட் அளவு கோலை கண்டுபிடிதார். பாரன்ஹீட்டை \(°\)\(F \) என எழுத வேண்டும். வெப்ப நிலையை சரியான அளவில் கண்டு அறிய உதவும் முக்கியமான முறை பாரன்ஹீட் ஆகும்.
பாரன்ஹீட் அளவீடு
Example:
\(25\)\(°\)\(F\) எனில், இதை இருபத்தைந்து டிகிரி பாரன்ஹீட் என படிக்க வேண்டும்.
கெல்வின்:
லோர்ட் கெல்வின் முழுமையான வெப்ப நிலை அளவு கோலை கண்டு அறிந்தார். எனவே இது கெல்வின் அளவு கோல் என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவு கோல் மற்ற இரண்டு அளவு கோலை விடவும் வெப்ப நிலையை துல்லியமாக கண்டறிய உதவுகின்றது. கெல்வின் அலகானது \(K\) என எழுதப்படுகிறது.
செல்சியஸ் மற்றும் கெல்வின் அளவீடு
Example:
\(100\) \(K\). இது நூறு கெல்வின் என படிக்க வேண்டும். வெப்பநிலையின் \(SI\) அலகு கெல்வின் \((K)\) ஆகும்.
Reference:
https://pixabay.com/fr/vectors/thermom%C3%A8tre-temp%C3%A9rature-1134182/
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d2/Barthermometer_Fahrenheit%2BCelsius.jpg
https://commons.wikimedia.org/wiki/File:CelsiusKelvin.svg
https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d2/Barthermometer_Fahrenheit%2BCelsius.jpg
https://commons.wikimedia.org/wiki/File:CelsiusKelvin.svg