PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் வெப்பநிலையினை அளவிடுதல் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
நாம் சென்றப்பகுதியில் அறிந்துக் கொண்டதுப் போன்று, ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் அதன் வெப்பநிலை ஆகும். மேலும், ஒரு பொருள் அதிக வெப்பநிலையினை கொண்டிருந்தால் அப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் அதிக வேகத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும்.
ஒரு பொருளின் வெப்பநிலையினை எவ்வாறு அளப்பது?
நமக்கு தெரியும் அனைத்து பொருளின் மூலக்கூறுகளும் மிகச் சிறிய துகள்களால் ஆனவை ஆகும். எனவே, அவற்றினை பகுப்பாய்வு செய்து, அதன் இயக்கத்தினை ( இயக்க ஆற்றல்) கணக்கிட்டு அதன் மூலம் வெப்பநிலையினை அளப்பது என்பது கடினமான செயல் ஆகும். எனவே நாம் வேறு வழி முறைகளைப் பயன்படுத்தி மட்டுமே ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலினை அளக்க முடியும். அதற்கு முன்பாக நாம் வெப்பத்தினால் திட, திரவ, மற்றும் வாயு மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.
வெப்பபடுத்துவதினால் மூலக்கூறுகளின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படுமா?
ஆம்
திண்மப் பொருள்களுக்கு வெப்பத்தினை அளிக்கும்போது அவை விரிவடையும் என்பது நமக்கு தெரியும். கீழே உள்ள செயல்பாட்டைக் கொண்டு திரவமும் வெப்பத்தினால் விரிவடையும் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:
- சிறிய கண்ணாடி பாட்டில்
- இரப்பர் மூடி
- காலி பேனா மை குழாய்
- நீர்
- வண்ணங்கள்
- மெழுகுவர்த்தி
- தாங்கி
- காகிதம்
செய்முறை:
கண்ணாடி பாட்டில்
- ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கண்ணாடி பாட்டிலில் வண்ண நீரினால் நிரப்ப வேண்டும்.
- பின்பு இரப்பர் மூடியின் மையத்தில் ஒரு துளையினை இட வேண்டும்.
- காலி பேனா மை குழாயில் அத்துளையின் வழியாக செலுத்த வேண்டும்.
- காற்று புகாதவாறு பாட்டிலை மூட வேண்டும்
- பின்பு மை குழாயில் நீர் ஏறி நிற்பதைக் கவனிக்க வேண்டும்.
- ஒரு காகித்ததில் அளவுகோலினை வரைந்து குழாயின் பின்புறம் வைத்து நீரின் நிலையினை குறித்துக்கொள்ள வேண்டும்.
- பாட்டிலை தாங்கியில் வைத்து மெழுகுவர்த்தியின் உதவியால் வெப்பப்படுத்த வேண்டும்.
நீரின் மட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறதா?
ஆம்
- பிறகு வெப்பத்தை அளிப்பதை நிறுத்தி விட வேண்டும்.
- நீர் குளிர்ச்சி அடைந்தவுடன் குழாயில் உள்ள நீர் மட்டத்தினை கவனிக்க வேண்டும்.
நிகழ்ந்த மாற்றம் யாது? ஏன்?
- நீரினை வெப்பப்படுத்தும் போது விரிவடைகிறது எனவும் குளிர்ச்சி அடையச் செய்யும் போது சுருங்குகிறது எனவும் அறிந்து கொள்ளலாம்.
வெப்பநிலைமானி
வெப்பநிலைமானியில் உள்ள திரவமானது வெப்பப்படுத்தும்போது விரிவடைகிறது. குளிர்ச்சி அடையும் போது சுருங்குகிறது. இதன்மூலம் வெப்பநிலையானது அளவிடப்படுகிறது. மேலும் திண்மம் மற்றும் திரவங்களில் வெப்பத்தினால் ஏற்படும் விளைவுகளை போன்றே நாம் வாயுக்களிலும் மாற்றங்களைக் கண்டறிய முடியும்.