
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஎபிதீலியல் செல்கள்:

எபிதீலியல் செல்கள்
- இவற்றில் தட்டையான, தூண் வடிவ செல்கள் காணப்படும்.
- உடலின் மேற்பரப்பைப் பாதுகாக்கும்.
தசை செல்கள்:

தசை செல்கள்
- இவை நீண்ட, கதிர்க்கோல் வடிவம் கொண்டவை.
- இவ்வகை செல்கள் சுருங்கி விரிவதால் தசைகளின் இயக்கத்திற்கு உதவுகிறது.
நரம்பு செல்கள்:

நரம்பு செல்கள்
- கிளைகள் போன்ற நீண்ட, நரம்பு நார்களைக் கொண்டது.
- உடல் செயல்களை ஒருங்கிணைக்கவும், செய்தி பரிமாற்றம் செய்வதற்கும் உதவுகிறது.
இரத்த சிவப்பு செல்கள்:

இரத்த சிவப்பு செல்கள்
- வட்ட வடிவம், இருபுறகுழி, தட்டு வடிவம் கொண்டது.
- உடலின் பல பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் வாயுவைக் கொண்டு செல்வதோடு அந்த பகுதிகளில் கார்பன் டைஆக்ஸைடடு வாயுவைச் சேகரிக்கும் பணியையும் மேற்கொள்கிறது.
செயல்பாடு 4:
நுண்ணுறுப்புகள் மற்றும் அவற்றின் பணிகள்:
- செல்சுவர் - செல்லைப் பாதுகாக்கும்.
- செல் சவ்வு - விலங்கு செல்லின் எல்லை.
- சைட்டோபிளாசம் - செல்லின் நுண்ணுறுப்புகள் அடங்கிய பகுதி.
- மைட்டோகாண்ட்ரியா - செல்லின் ஆற்றல் மையம்.
- நுண்குமிழ் - செல் உறுப்புகளுக்கு ஆதரவு வழங்குகிறது.
- பசுங்கணிகம் - செல்லின் உணவு உற்பத்தியாளர் .
- எண்டோபிளாச வலைப்பின்னல் - புரத சேர்க்கைக்கு உதவுகிறது.
Reference:
https://www.needpix.com/photo/download/170704/neuron-nerve-cell-axon-dendrite-cell-biology-nerves-neurocyte-neurotransmission