PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஎண்டோபிளாச வலைப்பின்னல்:
எண்டோபிளாச வலைப்பின்னல்
- "எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன, அமைதியாக இருக்கவும்" என்ற மேற்கோள் எண்டோபிளாச வலைப்பின்னலுக்குரியது.
- இது சைட்டோபிளாசத்திற்குள்தட்டையாகவோ அல்லது குழாய் மாதிரியான பைகளாலோ உருவான ஓர் அமைப்பு ஆகும்.
- இதில் சொரசொரப்பான மற்றும் மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல் என இரு வகைகள் உள்ளன.
- சொரசொரப்பான வலைப்பின்னலில் ரைபோசோம் இணைந்து இருக்கும். எனவே புரதச் சேர்க்கைக்கு உதவும்.
- மென்மையான வலைப்பின்னலில் ரைபோசோம் இருக்காது. இவை கொழுப்புகள் மற்றும் ஸ்டீராய்டுகளை தயாரித்து, அவற்றைக் கடத்தும் பணிகளை மேற்கொள்கின்றன.
உட்கரு:
உட்கரு
- "நான் சொல்வதை, மற்றவர்கள் செய்வார்கள்" என்ற மேற்கோள் உட்கருவிற்குப் பொருத்தமானது.
- இதுவே செல்லின் மூளை ஆகும்.
- தாவர செல்களிலும் விலங்கு செல்களிலும் சைட்டோபிளாசத்தில் உள்ளே உட்கரு இருக்கும்.
- உட்கருவை சுற்றி உட்கரு உறை உள்ளது.
- இதனுள்ளேச் சில நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் போன்றவை இருக்கும்.
- குரோமேட்டின் உடல்செல் பிரிதலின் போது செல் பகுப்பில் குரோமோசோம் ஆக மாற்றமடையும்.
- இது செல்லில் நடக்கும் அனைத்து உயிர் செயல் மற்றும் வேதி வினைகளைக் கட்டுப்படுத்துகிறது.
- மரபு வழி பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்துகின்றது.
செயல்பாடு 2:
மனிதனின் இரத்த ஓட்ட மண்டலத்தில் காணப்படும் உறுப்புகள் மற்றும் அவற்றின் பணிகளை வரிசைப்படுத்துக.
மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம், அதில் உள்ள உறுப்புகள் மற்றும் பணிகள்:
- செங்குருதி அணு - குருதிக்குச் செந்நிறம் தருவது.
- குருதி சிறுதட்டு - காயம் ஏற்பட்டால் இரத்தம் உறைய உதவுவது.
- வெண்குருதி அணு - உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் வழங்குவது.
இரத்த சிவப்பு செல்களில் உட்கரு இல்லை. எனவே, இவை விரைவில் இறந்து விடும். ஒவ்வொரு நொடிக்கும் சுமார் இரண்டு மில்லியன் செல்கள் இறக்கின்றன. ஆனால், மனித உடலில் புதிய செல்கள் தினமும் தோன்றுகின்றன.