PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மீனாவிற்கு, இரவு உணவு உண்ட பின் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், அவள் மருத்துவரிடம் சென்றாள்.  மீனாவினை பரிசோதனை செய்த மருத்துவர், நச்சாக மாறிய உணவை உண்டதால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், அவள் உட்கொண்ட உணவில் பாக்டீரியா இருந்ததாகவும் கூறினார்.
 
உணவில், பாக்டீரியா இருந்ததை மருத்துவர் எவ்வாறு அறிந்தார்? மேலும், நம் கண்களால் ஏன், அவ்வுயிரினத்தைக் காண இயலவில்லை?
 
ஏனெனில், பாக்டீரியா என்பது ஒருசெல்லால் மட்டுமே உருவான உயிரி, அவற்றை வெறும் கண்களில் காண இயலாது. நுண்ணோக்கியின் உதவிக் கொண்டு மட்டுமே காண இயலும். சால்மோனெல்லா  எனும் சிற்றினத்தைச் சேர்ந்த பாக்டீரியா உணவை நச்சாக மாற்றி விட்டதாகவும் மருத்துவர் விளக்கம் அளித்தார்.
 
shutterstock2099834617.jpg
சால்மோனெல்லா
 
இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு அடிப்படை அலகு உள்ளது. கண்ணில் காண முடியாத பாக்டீரியா முதல் பெரிய
நீலத் திமிங்கலங்கள் வரை, சின்னஞ்சிறு பாசிகள் முதல் பெரிய ஊசி இலை மரங்கள் வரை அனைத்தின் அடிப்படை அலகும் செல் ஆகும்.
செயல்பாடு 1:
1. ஒரு குழுவுடன், உயிருள்ளவைகளின் செயல்களாக நினைவில் உள்ளவற்றை எழுதுக.
  • சுவாசித்தல்
  • உண்ணுதல்
  • நடத்தல்
  • கழிவு நீக்குதல்
2. ஒரு தனிப்பட்ட செல் உயிரோடு இருப்பதாக நினைக்கிறீர்களா?
  • ஆம்.
  • ஏனெனில், ஒவ்வொரு செல்லும் தனித்தனி பணியை மேற்கொள்கின்றன.
3. நீங்கள் அறிந்த செல்லின் சில நுண்ணுறுப்புகளை பற்றி எழுதுக?
  • உட்கரு செல்லின் மூளையாகச் செயல்படுகிறது.
  • மைட்டோகாண்ட்ரியா செல்லின் ஆற்றல் மையம் எனப்படும்.
  • பசுங்கணிகம் செல்லின் உணவு உற்பத்தியாளர் ஆகும்.
  • செல் சுவர் செல்லின் வடிவம் மற்றும் செல்லின் நுண்ணுறுப்புகளை பாதுகாக்கும் கவசம் ஆகும்.  
மேற்கண்ட செயல்பாட்டின் மூலம், செல்லினைப் பற்றி முந்தைய வகுப்பில் படித்தவற்றை நினைவுக் கூர்ந்தோம். இனி, செல் மற்றும் அதன் பாகங்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாக இந்தப் பாடப்பகுதியில் காணலாம்.