
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு கட்டிடம் என்பது செங்கற்களால் அடுக்கப்பட்ட சுவரால் உருவாக்கப்படுகிறது. அது போலவே, தேன்கூடு அல்லது தேன் அடை என்பது, தேன் சேமிக்கப்பட்ட அறுகோண கட்டங்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பை அலகு என்கிறோம். மேலும், பல அலகுகள் சேர்ந்த கூட்டமைப்பைக் கட்டட சுவர், தேன் அடை போன்ற பெயர்களில் அழைக்கிறோம். இதனைப் போலவே, மனித உடலும் பல செல்களாலானது.
செங்கல் சுவரின் அடுக்கு
செல் என்பது என்ன?
ஒரு உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு செல் எனப்படும்.

செல்களின் அடுக்கு
செல்லின் அமைப்பு மாற்றுச் செயல்பாடு:
- ஒரு செல்லின் அமைப்பு என்பது, அதன் உள்ளே அமைந்து உள்ள செல் நுண்ணுறுப்புகள் அல்லது செல் பாகங்களைக் குறிக்கின்றது.
- ஒரு செல்லின் செயல் என்பது செல்லில் உள்ள நுண்ணுறுப்புகள் மற்றும் அச்செல்லின் ஒவ்வொரு பகுதியின் செயல்பாடு ஆகும்.
செல்கள் உயிரினங்களின் கட்டுமான அலகு ஆகும். அணுக்கள் பருப்பொருள்களின் அடிப்படை கட்டுமான பொருள் ஆகும்.
மனித உடல் விலங்கு செல்களாலும், மேலும் தாவரங்கள் தாவர செல்களாலும் உருவானவை.
ஒரு செல் உயிரிகள்:

ஒரு செல் உயிரிகள்
நுண்ணோக்கியின் உதவியுடன் காணக்கூடிய ஒரே ஒரு செல்லால் மட்டும் ஆன உயிரினங்கள் ஒரு செல் உயிரிகள் எனப்படும். அந்த ஒரு செல் அவ்வுயிரினத்தின் அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறது.
Example:
பாக்டீரியா, கிளாமிடோமோனாஸ் மற்றும் அமீபா
பல செல் உயிரிகள்:

வெங்காய செல்கள்
பல செல் கொண்ட உயிரினங்களில் செல்கள், பின்வருமாறு அமைக்கப்பட்டு உள்ளன.
- பல செல்கள் சேர்ந்த திசு அமைப்பு
- பல திசுக்கள் ஒன்று சேர்ந்த உறுப்பு அமைப்பு
- பல உறுப்புகள் ஒன்றிணைந்த உறுப்பு மண்டலங்களின் அமைப்பு
என்று பல்வேறு படிநிலைகளில் உள்ளன. மேலும், இவையாவும், செல்களின் கூட்டமைப்புகளால் உருவானதால், அவை பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன.

மனித தாடைச் செல்கள்