PDF chapter test TRY NOW
ஒவ்வொரு செல்லும் அதன் பணிகளைப் பொறுத்து அவற்றின் வடிவம், தன்மை மற்றும் சில சிறப்புக் கூறுகளையும் பெற்று உள்ளது. நரம்பு செல்கள் மற்றும் இரத்த சிவப்பு அணுக்கள் இரண்டையும் நாம் பார்க்கும் போது அதன் வித்தியாசத்தை நம்மால் காண இயலும். ஒவ்வொரு செல்லும் தனித்தனி செயல்பாடுகள் மற்றும் வேறுபாடுகள் கொண்டவை. இருப்பினும் பொதுவான ஒரு கட்டமைப்பு அனைத்திலும் உள்ளது.
செல்லின் உள்ளே என்ன உள்ளது?
செல்லின் உள்ளே சிறு சிறு உறுப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனித்தனி பணிகளை மேற்கொள்கின்றன. அதோடு அவை, செல்லின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. எனவே இவை, நுண்ணுறுப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
Example:
உணவு உற்பத்தி, கழிவு அகற்றுதல், உயிர் பாதுகாப்பு, செல்லைச் சரி செய்தல், செல் இனப்பெருக்கம் போன்ற செயல்பாடுகளைச் செய்யும் நுண்ணுறுப்புகள் செல்லின் உள்ளே உள்ளன.
விலங்கு மற்றும் தாவர செல்
செல் அமைப்பு:
செல்களின் பொதுவான அமைப்பு,
- செல் சவ்வு
- செல் சுவர் (தாவரச் செல்லில் மட்டுமே இருக்கும்)
- சைட்டோபிளாசம்
- உட்கரு (யுகார்யோட்டிக் செல்களில் உள்ளது)
1. செல் சவ்வு:
செல் சவ்வானது விலங்கு மற்றும் தாவரச் செல்களைச் சுற்றி எல்லையாக இருக்கும். இதனைப் பிளாஸ்மா சவ்வு என்றும் அழைக்கலாம். செல் சவ்வின் உதவியால் செல்லிற்கு உள்ளேயும் வெளியேயும் நீர் மற்றும் மற்ற மூலக்கூறுகள் கடந்து செல்கின்றன.
2. செல் சுவர்:
செல் சுவர் செல்லைத் தாங்குபவர் மற்றும் காப்பாளர் எனவும் அழைக்கப் படுகின்றன. ஏனெனில் இவை செல்லின் பாதுகாப்பு அரண்கள் ஆகும். விலங்கு செல்கள் ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை.
தாவர செல்கள் திடமான ஒழுங்கான வடிவம் கொண்டவை. இவற்றில் செல்சவ்விற்கு வெளியே கூடுதல் அடுக்குகள் உள்ளன. அவை செல் சுவர் எனப்படுகின்றன. செல்லுலோஸ் தாவர செல்லால் ஆனது. அதுவே தாவர செல்லிற்கு வடிவம் கொடுக்கின்றது.
தாவரம் எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும் செல்லுலோஸ் இருப்பதால் தான் திடமாக நிற்கின்றது. பிளாஸ்மோடெஸ்மாட்டா என்னும் சிறிய துவாரத்தின் மூலம் ஒவ்வொரு செல்லும் மற்ற செல்களுடன் இணைந்து கொள்கின்றது.
செல்சுவரில் காணப்படும் பிளாஸ்மோடெஸ்மாட்டா
மூலச் செல்கள்
இவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஏனெனில் இவை உடலில் உள்ள எந்த ஒரு செல்லாகவும் இவை மாற்றம் அடையக் கூடியவை.
Example:
இரத்த செல்கள், நரம்பு செல்கள், தசை செல்கள், சுரப்பி செல்கள்.
எனவே, அறிவியலாளர்கள் இவற்றை நோய்களைக் குணப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக இவ்வகை செல்கள் முதுகுத் தண்டில் ஏற்படும் காயத்தை குணப்படுத்த இவற்றைப் பயன் படுத்துகின்றனர்.
மனித மூலச் செல்கள்