PDF chapter test TRY NOW
செயல்பாடு 3:
தாவர மற்றும் விலங்கு செல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை நாம் பின்னே வரும் படத்தின் மூலம் காணலாம்.
தாவர மற்றும் விலங்குச் செல்
தாவர செல்:
- தாவர செல்லில், செல்லைச் சுற்றி ஒரு சுவர் உள்ளது. இது செல்லைப் பாதுகாக்கும். மேலும் செல்லின் வடிவத்தை நிலைப்படுத்தும் தன்மையும் கொண்டது.
- இவற்றில் காணப்படும் பசுமை நிறமுடைய பசுங்கணிகங்கள் உணவு உற்பத்திக்கு உதவுகின்றன.
- பெரிய குமிழிகள் செல்லின் நடுவில் அமைந்து உள்ளன. இவை கரிம, கனிம, நீர் மற்றும் செல் உறுப்புகளுக்கு ஆதரவு அளிக்கின்றது.
- உட்கரு செல்லின் ஓரத்தில் அமைந்துள்ளது. இவை செல்லின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படுகிறது.
- செல் சவ்வு கடினமானது. மேலும், சென்ட்ரியோல் இவற்றில் கிடையாது.
விலங்கு செல்:
- இவற்றில் செல்லைப் பாதுகாக்கும் மற்றும் செல்லின் வடிவத்தை நிலைப்படுத்தும் செல்சுவர் கிடையாது.
- விலங்குச் செல்களில் பசுங்கணிகங்கள் இல்லை.
- சிறிய குமிழிகள் செல்லின் உள்ளே இருக்கின்றன. இவை கரிம, கனிம, நீர் மற்றும் செல் உறுப்புகளுக்கு ஆதரவு அளிக்கின்றது.
- ஸ்பின்டில் நார்களைப் பெருகச் செய்யும் சென்டரியோல் இவற்றில் உள்ளன.
- செல் சவ்வு மெல்லியதாகவும், நெகிழ்வுத் தன்மை கொண்டவையாக இருக்கும்.