
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநெருப்பு ஒரு வாயுவா?
இல்லை, நெருப்பு ஒரு பருபொருள் ஆகும்.
ஒரு திரவமா, ஒரு திடப்பொருளா? இல்லை
சுடர் என்பது, ஒரு வேதிவினை மற்றும் வாயுக்களின் கலவை ஆகும். சுடரானது ஒளி மற்றும் வெப்பத்தைத் தருகிறது. இது பருப்பொருள் கிடையாது ஆனால், நெருப்பு ஒரு பருப்பொருள் ஆகும். ஆவி நிலையிலுள்ள எரிபொருள், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நீராவி மற்றும் பல எளிதில் ஆவியாகிற பொருள்கள் ஆகியவை சுடரின் வேதிவினையாக்க் கருதப்படுகின்றன.
சுடர் மற்றும் அதன் அமைப்பு:
ஒளியின் திருவிழா எது?
தீபாவளி.

அந்த விழாவின் சிறப்பு என்ன?
வீடுகளை அலங்கரிக்க அதிக விளக்குகளை ஏற்றி வைப்போம் இல்லையா?
ஆம்.
இப்போது விளக்குகள் எவ்வாறு ஒளிர்கின்றன?
ஆம், சுடருடன் ஒளிர்கின்றன.
வண்ண வண்ண சுடர் நாம் சோதனை செய்வோமா?

வண்ண வண்ணச் சுடர் சோதனை செய்வோம் வாருங்கள்
- வெண்மை சுடர் - எப்சம் உப்பு
- ஊதா சுடர் - லித்தியம் உப்பு
- இண்டிகோச சுடர் - பொட்டாசியம் குளோரைடு
- நீல சுடர் - பிளீச்சிங் பவுடர்
- பச்சை சுடர் - போராக்ஸ் பவுடர்
- மஞ்சள் சுடர் - கால்சியம் குளோரைடு
- ஆரஞ்சு சுடர் - சமையல் உப்பு
- சிவப்பு சுடர் - ஸ்டிரான்ஸ்யம் குளோரடு
மேற்கண்ட உப்பை ஆல்கஹால் கலவையுடன் எதாவது ஒரு சுடருடன் வண்ணமாக்கி மகிழலாம்.

மெழுகுவத்தி சோதனை
சுடர் என்பது, எரியக்கூடிய பொருளின் எரிதல் மண்டலமாகும். எரியும் போது ஆவியாகும் பொருள்கள் சுடரை உருவாக்குகின்றன.
Example:
மெழுகு, மண்ணெண்ணெய் போன்றவை ஆகும்.
அனைத்துப் பொருள்களும் சுடரை உருவாக்குமா?
கிடையாது.
சில பொருள்கள் சுடரை உருவாக்காது, ஏனெனில், அவை ஆவியாகாத பொருள்களைக் கொண்டுள்ளன.
மெழுகு சுடரின் அமைப்பு:
ஒரு மெழுகுவர்த்திச் சுடர் மூன்று முக்கிய மண்டலங்களைக் கொண்டுள்ளது. அவைகள் முறையே,
- சுடரின் வெளிப்புறப் பகுதி
- சுடரின் நடுப்பகுதி
- சுடரின் உட்புற பகுதி
சுடரின் வெளிப்புறப் பகுதி:
இது எரிபொருள் முழுமையான எரிதல் நடைபெறும் பகுதி ஆகும். இது நீலநிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும். இது சுடரின் ஒளிராத பகுதி ஆகும்.
சுடரின் நடுப்பகுதி:
இது எரிபொருள் குறைவாக எரிதல் நடைபெறும் பகுதி ஆகும். இது மஞ்சள் நிறத்தை கொண்ட வெப்பமான பகுதியாகும்.இது சுடரின் ஒளிரும் பகுதி.
சுடரின் உட்புற பகுதி:
இது எரிபொருள் எரியாத வாயுக்களைக் கொண்ட பகுதியாகும். இது கருமை நிறம் கொண்ட மிக குறைந்த வெப்பப்பகுதியாகும்.

சுடர்
மெழுகுவர்த்தியின் மேலே உள்ள காற்று எரிவதால் மெழுகுவர்த்தி சுடர் உருவாகிறது. வெப்பசலனக் கொள்கையின்படி சுடரின் மேல் எரியக்கூடிய காற்றின் அடா்த்தியானது. சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் அடா்த்தியைவிட குறைவாக இருப்பதால் சுடரானது. எப்போழுதும் மேல்நோக்கி இருக்கின்றது.