PDF chapter test TRY NOW
மூன்று வகை எரிதல் செயல்கள் நடைபெறுகின்றன. அவைகள் முறையே,
- வேகமாக எரிதல்
- தன்னிச்சையாக எரிதல்
- மெதுவாக எரிதல்
வேகமாக எரிதல்:
இந்த வகையான எரிதல் என்பது, வெளிப்புற வெப்பத்தின் உதவியுடன் பொருளானது வேகமாக எரிந்து வெப்ப ஆற்றலையும் ஒளியையும் உருவாக்குகிறது.
Example:
L P G எரிதல்
தன்னிச்சையாக எரிதல்:
இந்த வகையான எரிதல், வெளிப்புற வெப்பத்தின் உதவி இன்றி பொருளானது தன்னிச்சையாக எரிந்து வெப்ப ஆற்றலும் ஒளியும் உருவாக்கும்.
Example:
பாஸ்பரஸ் அறை வெப்பநிலையில் தன்னிச்சையாக எரிதல்.
மெதுவாக எரிதல்:
மெதுவாக எரிதல் என்பது, பொருளானது குறைந்த வேகத்தில் எரிதல் ஆகும்.
Example:
சுவாசித்தல் மெதுவாக எரிதலுக்கு உதாரணம் ஆகும். அதாவது சுவாசித்தலின் போது ஆக்ஸிஜனை உள்சுவாசித்து கார்பன் வெளியிடப்படுகிறது.
எரிபொருளை நான் எப்படி தேர்வு செய்வது?
ஒரு நல்ல எரிபொருளின் பண்புகள்:
நல்ல எரிபொருள்
- அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும்.
- அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்.
- எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் இருக்க வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட மிதமான வேகத்தில் எரிதல் வேண்டும்.
- அதிக அளவு வெப்பநிலை வழங்க வாங்காமல் இருக்க வேண்டும்.
- விரும்பத்தகாத எந்த ஒரு பொருள் வெளியிடுவதாக இருந்தால் கூடாது.
- சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் மாசுபடுத்தாக இருக்க வேண்டும்.
நெருப்பை கட்டுப்படுத்துதல்:
நெருப்பை உற்பத்தி செய்வதற்கு கீழே தேவையான வேதி பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அவற்றை அகற்றுவதன் மூலம் நெருப்பைக் கட்டுப்படுத்தலாம்.
நெருப்பு
- எரிபொருள்
- காற்று ஆக்சிஜன் வழங்க
- வெப்பம் (வெப்பநிலையை உயர்த்த)
- எரிதல் வெப்பநிலை