PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநீங்கள் எப்பொழுதாவது சிந்தித்தது உண்டா? நமது உடலில் வலி ஏன் ஏற்படுகிறது மற்றும் எவ்வாறு குணப்படுத்தப்படுகிறது என்றும்?
காயம்
காயம், தீப்புண்கள், கூர்மையான பொருட்கள் அழுத்துவதினாலும் மற்றும் பிற காரணங்களாலும் நம் உடலில் வலி ஏற்படுகின்றன. காயப்பட்ட இடத்தை சுற்றிலும் எழும் எரிச்சல் உணர்வோ அதிகமான தலை வலியோ அல்லது மூட்டு சுழற்சியால் ஏற்படும் வலி உணர்வோ கூட வலிக்கு காரணமாக இருக்கலாம். கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, தலைவலி, நரம்பு சேதமுறுவதால் ஏற்படும் வலி, காயப்படுவதினால் உண்டாகும் வலி மற்றும் வியாதிகளால் ஏற்படும் வலி ஆகியவை சில பொதுவான வலிகள் ஆகும்.
வலி நிவாரணிகள்
வலி நமக்கு காயப்பட்ட இடத்தில் ஏற்படுகிறதா? இல்லை
வலி என்ற இந்த விரும்பத்தகாத மனவெழுச்சியானது மூளையில் உருவாகிறது. காயப்பட்ட இடத்தில் இல்லை. தீயினால் ஏற்படும் காயமாக இருந்தாலும் சரி. அந்த உந்துதல் மூளையைச் சென்றடைந்தவுடன் மறுமொழி தரத்துண்டுகிறது. அவ்வாறு மூளையிலிருந்து பெறப்படும் சமிக்கையில் தீயிலிருந்து நம் கையின் தசைகள் பின்னிழுக்கப்படுகின்றன.
தீ காயம்
வலி உணரப்படும் புள்ளியிலிருந்து வரும் தகவல்களுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக மூளையும் தகவல் தரத் தொடங்கும். வலியை கட்டுப்படுத்தும் அல்லது குறைக்கும் வேதிப்பொருளை வெளியேற்றுவது மற்றும் கூடுதலான வெள்ளை இரத்த அணுக்களையும், இரத்தத்தட்டுகளையும் காயம்பட்ட இடத்திற்கு அனுப்புவது ஆகிய செயல்களின் மூலம் நிவாரண பணி தொடரும்.
வலி
வலி நிவாரணிகள் அல்லது வலி நீக்கிகள் என்பன நமது உடலிலிருந்து வெளியாகும் வலி குறைக்கும் வேதிப் பொருள்கள் ஆகும் .
வலி நிவாரணிகள் வலி என்ற உணர்வை கட்டுப்படுத்துகிறது. மைய நரம்பு மண்டலத்தில் நேரடியாக செயல்பாட்டோ அல்லது வலி என்ற உணரப்படும் புற நரம்பு இடங்களில் அதிக மாற்றம் இல்லாத நிலையை (வலியை) நீக்கி செயல்படுகின்றது.
பாராசிட்டாமால்
காய்ச்சலில் அவதியுறும்பொழுது நாம் பாராசிட்டாமால் உட்கொள்கிறோம். பாராசிட்டமால் நமது உடலில் ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு, மூளைக்கு அனுப்பப்படும் வலியின் தீவிரத்தைக் குறைத்தும், வலி மற்றும் உடல்வெப்பநிலையை அதிகரிக்கும் புரோஸ்டாகிளான்டின்களின் அளவைக் கட்டுப்படுத்தியும் செயல்படுகின்றன.
அறுவை சிக்கிச்சையின் போது நாம் வலி அறியாமல் இருக்க எந்த மருந்து நமக்கு அளிக்கப்படுகிறது என்று தெரியுமா ?
மயக்க மூட்டிகள்: \(1860\) இல் ஆல்பர்ட் நீம்மானின் என்பவர் கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தார்.
சில சமயங்களில் நமக்கு காயங்கள் ஏற்ப்படாமல் அங்கு வீக்கங்கள் ஏற்படும் அதனை சரி செய்ய நாம் வலி நிவாரிணியை தான் பயன்படுத்துகிறோமா? இல்லை வேறு மருந்து உண்டா?
வேறு மருந்து உண்டு அதன் பெயர் வீக்க நீக்கிகள்.
பாரம்பரிய வீக்க நீக்கிகள் அவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.
- போதைத் தன்மையற்ற வலி நீக்கி
Example:
ஆஸ்பிரின்.
- போதைத்தன்மை வாய்ந்த வலி நீக்கி
Example:
கோடீன்.
புதினா
புதினா ஒரு சிறந்த வீக்க நீக்கி ஆகும்.