PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநாம் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் போது மருத்துவர் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்றும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் என்று கூறுவார். பின்னர் உடனே ஒரு சில குறிப்பிட மருந்தை நமக்கு அளிப்பார்.
அந்த மருந்தில் என்ன இருக்கும், அந்த மருந்து நம் உடலில் என்ன செய்கிறது, என்று உங்களுக்கு தெரியுமா?
ஆண்டிபயாடிக்
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, சிறிய அளவிலான காயங்கள் கூட, மனிதா்களின் உயிரை பரித்துக் கொண்டிருந்தது. ஆனால், நுண்ணுயிர்க் கொல்லி கண்டுபிடிப்பானது, அந்நிலையை முற்றிலுமாக மாற்றி விட்டது. தற்பொழுது மரணத்தை ஏற்படுத்தும் பல தொற்று நோய்களைக் குணப்படுத்தும் மிகப்பெரும் மருந்தாக ஆண்டிபயாடிக்குகள் அதவாது நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகள் இருக்கிறது.
இத்தகை சிறப்புகள் வாய்ந்த ஆண்டிபயாடிக்குகள் எப்பொழுது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியுமா?
ஸ்டேபைளோகோகஸ் பாக்டீரியா
ஆண்டிபயாடிக் மருந்தானது எதிர்பாராவிதமாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறப்பு தன்மை வாய்ந்த மருந்து ஆகும். அதாவது, \(1928\) ஆம் ஆண்டில் டாக்டர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் என்ற பிரிட்டிஷ் நுண்ணுயிரியலாளர் நிமோனியா, தொண்டைவலி போன்ற பல நோய்களுக்குக் காரணமான ஸ்டேஃபிளோகோகஸ் பாக்டீரியாவை அதற்கு உண்டான பாக்டீரியா வளர் தளத்தில் (Bacterial culture) பாக்டீரியா வளர்ப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். அப்பொழுது, அவா் பயன்படுத்திய மேசையைச் சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு விட்டு விடுமுறையில் சென்றுவிட்டார்.
பல நாட்களுக்கு பிறகு அவர் திரும்பி வந்து பார்த்த பிறகு பாக்டீரியா வளர்தளத்தில் பூஞ்சைகள் சிறு ரொட்டி வடிவில் வளர்ந்து உள்ளதை கண்டுபிடித்தார். வளர் தளப்பகுதியை நுண்ணோக்கியில் பார்க்கும் போது அந்த பாக்டீரியாவும் வளர்ச்சி அடையவில்லை என்பதை கண்டறிந்தார். குறிப்பிட்ட ஒரு பூஞ்சைக்குப் பாக்டீரியாவை கொள்ளக்கூடிய சக்தி உள்ளது என்பதை கண்டறிந்தார்.
அவர் தம்முடைய பரிசோதனையில் ஸ்ட்ரீப்டோகோக்கஸ், மெனிங்கோகோகஸ் மற்றும் டிஃபபெதீரியா பேசிலஸ் போன்ற பரவலான தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை ஈடுபடுத்தினார். இறுதியில் பென்சிலின் நோட்டேட்டம் என்ற பூஞ்சையானது பாக்டீரியாக்களை அழிக்கிறது என்பதை கண்டறிந்தார்.
உலகின் முதல் ஆண்டிபயாடிக் மருந்து பென்சிலியம் நொடேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது ஆகும்.
பென்சிலியம் நொடேட்டம்
இவரின் ஆய்வுக்கு பிறகு தான் பூஞ்சை மருந்தாக பயன்ப்படுத்தப்பட்டதா ? இல்லை
தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கூட தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கு முதன் முதலாக பூஞ்சை பயன்படுத்தப்பட்டுள்ளது. என்பதற்காக சான்றுகளும் இருக்கிறது. அதாவது, எகிப்தியர்கள் பாதிக்கப்பட்ட காயங்களுக்கு ரொட்டி பூஞ்சையைப் பயன்படுத்தினார்கள். பண்டைய கிரேக்கர்கள் இடையேயும் செர்பியாவிலும், இந்தியாவிலும் இது போன்ற சிகிச்சை முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை சிறிதளவே பயனுள்ளதாக இருந்துள்ளது. நவீன காலங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆண்டிபயாட்டிக் மருந்துகளின் மூலம் பல சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பென்சிலின்
ஃப்ளெமிங் பென்சிலின் என்ற மருந்தை கண்டுபிடித்த பிறகு இரண்டாம் உலகப்போரில் போது காயமடைந்த வீரர்களுக்கு பென்சிலின் பயன்படுத்தப்பட்டது. இதன் முடிவுகள் மிகவும் வியப்பாக இருந்தன. முதலாம் உலகப்போரில் பாக்டீரியாவினால் ஏற்பட்ட நிமோனியா என்ற தொற்று நோயினால் \(18\) சதவிதத்திலிருந்து இரண்டாம் உலகப்போரின் போது \(1\) சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
சில தாவரங்களும் நுண்ணுயிரிகளும் நச்சுத்தன்மையுள்ள பொருளை உற்பத்தி செய்கின்றன. இந்த பொருள்கள் மற்ற உயிர்களை அழிக்க உதவுகின்றது. இவை, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என அழைக்கப்படுகின்றன .
இன்று பல மருந்து தொழிற்சாலைகள் ஆண்டிபயாடிக் மருந்துகளை செயற்கை முறையில் உற்பத்தி செய்கின்றன.
Example:
குளோரோபினிகால் மற்றும் டெட்ராசைக்ளின் போன்றவை புதிய வகை ஆண்டிபயாடிக் ஆகும்.
அனைத்து ஆண்டிபயாடிக்குகளையும் செயற்கை முறையில் உருவாக்க முடியுமா ? ஆம், முடியும்.
ஆண்டிபயாடிக் V தவிர செயற்கை முறையில் பல ஆண்டிபயாடிக்குகளை நம்மால் செயற்க்கையாக உருவாக்க முடியும். இந்த வகை கண்டுபிடிப்புகள் மூலம் இவைகள் மிகக் குறைவான விலையில் இன்று மக்களுக்கு வழங்கப்படுகின்றன. பாக்டீரியாவினால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களும் இறப்பு விகிதமும் தற்போது மிகவும் குறைந்துள்ளன.
ஆண்டிபயாடிக் மருந்தை அதிகமாக பயன்படுத்தினால் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்ப்படுமா ?
நுண்ணுயிரி எதிரிகளை அதிகமாக பயனபடுத்துவதை நாம் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், ஒரு நபர் தொடர்ந்து நீண்ட காலத்திற்க்கு ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, இயல்பான நுண்ணுயிர் எதிர்ப்பி்களின் செயல்பாடு குறைந்து விடுகிறது. எனவே, இதற்கு மாற்றாக அவர் அதிக வீரியம் மிக்க மருந்துகளை உட்டக்கொள்ள நேரிடும் இவ்வாறு ஆண்டிபயாடிக்கானது, இன்று பெரிய அளவிலான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்க்கு இன்று பயனபட்டு வருகின்றது.
அனைத்து நோய்களையும் இந்த ஆண்டிபயாடிக்கானது குணப்படுத்த முடியுமா ? இல்லை
சளி மறறும் புளூ போன்ற நோய்கள் ஏறபடுத்தும் வைரஸ்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்வது கிடையாது.