PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபலபடிகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. அவை
- இயற்கை பலபடிகள்
- செயற்கை பலபடிகள்
இயற்கை பலபடிகள்:
உயிரினங்களின் உடல்களில் காணப்படும் புரதங்களும், கார்போஹைட்ரேட்களும் மரம் மற்றும் காகிதத்தில் உள்ள செல்லுலோசும் இயற்கை பலபடிகள் ஆகும்.
நமது உடலே இயற்கை பலபடி பொருட்களால் ஆனது.
வாழ்க்கை செயல்முறைகளுக்கு தேவையான கட்டமைப்பு பொருட்கள் மற்றும் மூலக்கூறுகளை வழங்குவதில் இயற்கை பலபடிகள் முக்கிய பங்கு வகிகின்றன.
i. புரத பலபடிகள்:
அமினோ அமிலங்கள் என்பது (\(-NH_2)\) என்ற தொகுதியையும் (\(-COOH)\) என்ற தொகுதியையும் கொண்ட மூலக்கூறு ஆகும். இவை புரத உருவாக்கத்தில் ஒற்றைபடிகளாக செயல்படுகிறது.
அமினோ அமிலம்
புரதங்கள் உருவாதல்
\(20\) வகையான அமினோ அமிலங்கள் புரத பலபடிகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை பல வகைகளில் சேர்க்கை அடைந்து பல வகையான புரத பலபடிகளை உருவாக்குகின்றன.
மரபு பண்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் DNA ஒரு இயற்கை பலபடிக்கு உதாரணமாகும்.
DNA
Example:
நொதிகள், பட்டு, தோல், முடி, விரல் நகங்கள், இறகுகள் மற்றும் விலங்குகளின் உரோமங்கள்.
ii. கார்போஹைட்ரேட் பலபடிகள்:
கார்போஹைட்ரேட் பலபடிகள்
|
உதாரணங்கள்
|
செல்லுலோஸ் | ஆடைகளில் பயன்படுத்தப்படும் பருத்தி. |
கைட்டின் | நண்டு மற்றும் சிலந்தி போன்ற பூச்சிகளின் புற எலும்புகூடுகளிலும் காளான் போன்ற பூஞ்சைகளிலும் காணப்படுகிறது. |
லிக்னின் | தாவரங்களுக்கு கட்டமைப்பை கொடுக்கிறது. |
செயற்கை பலபடிகள்:
பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயுக்களிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்ட நெகிழிகள் செயற்கை பலபடிகளாகும்.
எத்தீலின் மற்றும் ப்ரோபைலீன் போன்ற ஒற்றைபடிகள் இணைந்து பெட்ரோலிய எண்ணையை உருவாக்குகின்றன.
நீர்குழாய்களாகப் பயன்படுத்தப்படும் பாலி வினைல் குளோரைடு (PVC) என்ற நெகிழி வினைல் குளோரைடு என்ற ஒற்றைப்படிகள் இணைந்து உருவாகின்றன.
ஒற்றைபடிகளின் பண்புகளின் அடிப்படையிலும் அவை பலபடிகளில் அமைந்துள்ள முறையின் அடிப்படையிலும் பலபடிகளின் பண்புகளை பொருத்தும் பல வகையான பலபடிகள் வகைபடுத்தப்படுகின்றன.