PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇழைகள் என்றால் என்ன? அவற்றை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோமா?
ஆம். நாம் பயன் படுத்தும் ஆடைகள், பைகள், கயிறுகள்,போர்வைகள் யாவும் இழைகளால் ஆனவை.
இழைகள் பலபடி பொருட்களால் ஆனது.
இழைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை
- இயற்கை இழைகள்
- செயற்கை இழைகள்
இயற்கை இழைகள்:
நீண்ட மூலக்கூறுகள் பின்னிப் பிணைந்து நீளமான, சரம் போன்ற அமைப்பு உருவாக்கப்படும் இழைகள், இயற்கை இழைகளாகும்.
இயற்கை இழைகளின் மூலங்கள்:
தாவரங்கள்: இவ்வகையான இழைகள் தாவரங்களிலிருந்து கிடைக்கிறது.
Example:
பருத்தி, தேங்காய் நார், சணல் மற்றும் பிளாக்ஸ்.
பருத்தி மற்றும் தேங்காய் நார்
விலங்குகள்: விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட உரோமங்களைக் கொண்டு இழைகள் தயாரிக்கப்படுகிறது.
Example:
கம்பளி, பட்டு.
கம்பளி மற்றும் பட்டு
கனிமங்கள்: இவை இயற்கையில் கிடைக்கும் கனிம பொருட்களிலிருந்து கிடைக்கிறது.
Example:
கண்ணாடி இழை. இது சில்லிக்காவை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இயற்கை இழைகளின் பண்புகள்:
- இயற்கை நார்களை சுழற்றி இழையாக, நூலாக, கயிறாக ஆக்க முடியும்.
- பின்பு அவற்றை நெய்தோ, பின்னியோ, படரவிட்டோ, இணைத்தோ, துணிகளாகவும், களங்களாகவும், மின்கடத்தாப் பொருள்களாகவும் மற்றும் பிற பொருட்களாகவும் மாற்ற முடியும்.
பட்டு - இயற்கை இழை:
கொதிநீரில் பட்டுக்கூடுகள்
பட்டுப்புழுக்களின் கூடுகளை கொதிக்க வைத்துப் பெரும் இயற்கை இழை பட்டு எனப்படுகிறது.
பட்டின் வகைகள்:
- மல்பெரி பட்டு
- டஸ்ஸர் பட்டு
- முகா பட்டு
- எரி பட்டு
மல்பெரி பட்டு உலகளவில் இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
பட்டு இழைகளிலிருந்து பட்டு சேலை தயாரித்தல்
பட்டு இழையின் பண்புகள் மற்றும் பயன்கள்:
பட்டு இழை இயற்கை இழைகளுள் மிக வலிமையானது, இவை உடைகளாகவும், தரைவிரிப்புகளாகவும் மற்றும் பாராசூட்டுகளாகவும் பயன்படுகிறது.