PDF chapter test TRY NOW

செயல்பாடு - 5
 
இயற்கை இழையால் ஆன ஒரு துண்டுத்துணியினையும் செயற்கை இழையால் ஆன துண்டுத்துணியினையும் எரித்தல்.
  
பருத்தியால் ஆன துண்டுத்துணி மற்றும் பாலியெஸ்டராலான துண்டுத்துணி ஆகிய இரண்டையும் இடுக்கியில் ஒன்றன்பின் ஒன்றாக இடுக்கியில் பிடித்து தீயில் எரிக்க வேண்டும்
 
பருத்தி துணி எரியும் போது நீங்கள் கண்டது என்ன?
  
பருத்தி துணி எரிந்து சாம்பல் உருவாகின. ஏனெனில் அவை மட்கும் தன்மை கொண்ட இயற்கை இழையால் ஆனவை
 
பாலியெஸ்டர் துணி எரியும் போது நீங்கள் கண்டது என்ன?
 
பாலியெஸ்டர் துணி எரியும் போது அவை  உருகியது. ஏனெனில் இந்த வகை துணிகள் முற்றிலும் செயற்கை இழையால் ஆனவை. அதனால் தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் சமையலறை மற்றும் ஆய்வகங்களில் செயற்கை இழை ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம்.
 
செயல்பாடு - 6 
  
ஒரு பருத்தித்துணி மற்றும் குடைத்துணியை நனைத்தல்.
 
மழை நாள்களில் நாம் குடை பயன்படுத்துகிறோம் அல்லவா? நாம் என்ன வகையான குடை பயன்படுத்துகிறோம்?
 
நைலான் மற்றும் பாலியெஸ்டர்

பருத்தித் துணியால் ஆன குடையினைப் பயன்படுத்த முடியுமா?
 
முடியாது. பருத்தி துணி நீரினை குடையின் வழியே அனுமதிக்கும். எனவே அதனை பயன்படுத்துவதில் பலனில்லை

எந்தத் துணி விரைவில் உலருகிறது? பருத்தித்துணி அல்லது குடைத்துணி?
 
குடைத்துணி. ஏனெனில் அவை நீரை உறிஞ்சுவதில்லை
 
செயல்பாடு - 7
 
நெகிழியின் சரியான பயன்பாடு மற்றும் தவறான பயன்பாடு.
 
YCIND_221221_4846_chemistry_5.png
 
சரியான பயன்பாடு
தவறான பயன்பாடு
 தலைக்கவசம்  உறிஞ்சுக்குழாய்கள்
 ஊசிகள்  மெல்லிய நெகிழிகள்
 மின்கம்பிகள்  சமையலறைக் கருவிகள்
 இரத்தப்பைகள்  தேநீர்க் குவளைகள்
 
செயல்பாடு - 8
 
வெவ்வேறு வகையான நெகிழிகளை இனம் காணுதல்.
 
பொருள்
ரெசின் குறியீட்டு எண்
சுருக்கெழுத்து
பாதுகாப்பின்
வகை 
பொருளின் பயன்பாடு
தண்ணீர் பாட்டில் 
 \(05\)
 PP
 பாதுகாப்பானது  தண்ணீர் எடுத்துச் செல்ல பயன்படுகிறது.
நீர்க்குழாய்
 \(03\)
 PVC
 ஆபத்தானது  வீடுகளில் நீரினை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல பயன்படுகிறது.