PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
செயல்பாடு - 1
 
சில ஐஸ்கட்டிகள் மற்றும் ஒரு பாலித்தீன் பை இரண்டையும் ஒப்பிடுக. இரண்டு பொருள்களிலுமே பல எண்ணிக்கையிலான மூலக்கூறுகள் இணைந்துள்ளன. இவ்விரண்டுமே பலபடி பொருள்களா?
 
icecube.jpgcover.jpg
ஐஸ்கட்டிகள் மற்றும் பாலித்தீன் பை
 
ஐஸ்கட்டிகள் என்பது வலிமை குறைந்த விசைகளால் பிணைக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான திண்மம். இதனை சாதாரண வெப்பப்படுத்துதல் மூலம் உருக வைத்து எளிய மூலக்கூறுகளை பெறலாம்.
 
ஆனால் பாலித்தீன் என்பது வலிமையான சகப்பிணைப்பின் மூலம் பிணைக்கப்பட்ட நீண்ட சங்கிலித் தொடர் பலபடியாகும். இதனை வெப்பபடுத்துதல் மூலம் ஒற்றைபடிகளை பெற முடியாது
எனவே பாலித்தீன் மட்டுமே பலபடி பொருளாகும்
 
செயல்பாடு - 2
 
நைலான் எவ்வளவு வலிமையானது?
 
இரும்பாலான தாங்கி ஒன்றினை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு கிளாம்பினைப் பொருத்தவும்.50 செ.மீ நீளமுடைய பருத்தி இழை, நைலான் இழை, கம்பளி நூல் மற்றும் பட்டு இழை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
YCIND_221221_4846_chemistry_1.png
 
முதலில் பருத்தி இழையின் ஒரு முனையைத் தாங்கியில் கட்டித் தொங்கவிட்டு அதன் கட்டப்படாமல் முனையில் எடைகற்கள் வைக்கக்கூடிய அளவிற்கு ஒரு குறுந்தட்டினை பொருத்தமாக தொங்க விட வேண்டும்.
 
 பின்னர் குறுந்தட்டின் மேல் பத்து கிராமில் தொடங்கி, ஒவ்வோர் எடைகல்லாக வைத்துக் கொண்டே வருக, நூல் அறுந்து போகும்வரை வரை எடைகற்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, அறுந்துபோகும்போது, எந்த எடையில் கயிறு அறுந்தது என்பதனைக் குறித்துக் கொள்ள வேண்டும். 
  
இதே செயல்பாட்டினை கம்பளி நூல், பட்டு நூல் மற்றும் நைலான் இழைகள் கொண்டு மீண்டும் செய்ய வேண்டும்.
  
இழைகளை அவற்றின் வலிமை அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக.
  
பருத்தி < கம்பளி < பட்டு < நைலான்

மேலே உள்ள செயல்பாட்டிலிருந்து நீவிர் அறிவது யாது?

நைலான் இழை மற்ற இழைகளைக் காட்டிலும் வலிமையானது

எந்த வகை இழை அதிக வலிமையானது?

நைலான்

எந்த வகை இழை  வலிமை குறைவானது?

பருத்தி

செயல்பாடு - 3
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைக் கண்டு அவை எந்த வகையான இழைகளால் ஆனவை என்பதனை இனம் காண்க.
 
YCIND_221221_4846_chemistry_4.png
  
இயற்கை இழைகள் சணல், பருத்தி, பட்டு சேலை, கம்பளி
செயற்கை இழைகள் ரேயான் பொருள், பாலியெஸ்டர்
 
செயல்பாடு - 4
  
செயற்கை இழையா? இயற்கை இழையா?
  
பல இழைகளின் துண்டுத் துணிகளை, மாணவர்கள் தொட்டுப் பார்த்து எந்த வகை இழையால் செய்யப்பட்டது என்பதை அறிதல்.
 
இழையின் பெயர்
இழையின் வகை
இயற்கை (அ)செயற்கை
 பட்டு  இயற்கை இழை
 கம்பளி  இயற்கை இழை
 ரேயான்  பகுதி செயற்கை இழை
 பாலியெஸ்டர்  செயற்கை இழை
 நைலான்  செயற்கை இழை
 
படங்களை பார்த்தும் மாதிரிகளை தொட்டுப் பார்த்தும் செய்யும் செயல்பாடுகள் இழைகளின் வேறுபாடுகளை அறிந்து கொள்ள உதவியாக உள்ளது.