PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநெகிழிகளின் சிதைவுறு பண்பின் அடிப்படையில் இரு பிருவுகளாக பிரிக்கப்படுகிறது.
- வீரியம் குறைந்த நெகிழிகள்
- மட்கும் தன்மை கொண்ட நெகிழிகள்
வீரியம் குறைந்த நெகிழிகள்:
வீரியம் குறைந்த நெகிழிகள் பெட்ரோலியத்தில் இருந்தே தயாரிக்கப்படுகிறது.
வீரியம் குறைந்த நெகிழிகள் சூரிய ஓளி, ஆக்சிஜன் மற்றும் நீருடன் இருக்கும் போது சிதைக்கிறது, இவ்வகை நெகிழிகளில் உள்ள வேதிப்பொருள் இவ்வகை நெகிழிகளை விரைவாக உடையச் செய்கிறது.
வீரியம் குறைந்த நெகிழிகள் முற்றிலும் சிதைவடைவதில்லை. அவை மைக்ரோ நெகிழிகளாக உடைகின்றன. எனவே இவை நன்மை பயக்கும் விதத்தில் இல்லை.
மட்கும் தன்மை கொண்ட நெகிழிகள்:
\(1980\) களில் மட்கும் தன்மை பற்றிய கருத்துகள் உருவாகின.
புதுப்பிக்கும் தன்மை வாய்ந்த மூலங்களான சோளம், கரும்பு, அவகேடோ விதைகள் அல்லது இறால்களின் ஓடுகள் போன்றவற்றின் மூலப்பொருள்களைச் சேகரித்து உருவாக்கப்பட்ட நெகிழிகள் மட்கும் தன்மை கொண்ட நெகிழிகள் ஆகும்.
மட்கும் நெகிழி
இவை நுண்ணுயிரிகளால் முழுவதும் சிதைக்கப்பட்டு கார்பன் - டை - ஆக்சைடு, மீத்தேன், நீர் மற்றும் இன்னப்பிற பொருள்களாக உரமாக மாறுகின்றன.
நெகிழி உண்ணும் பாக்டீரியா:
ஐடெனல்லா சகீயன்சிஸ் \(201-F6\)என்ற பாக்டீரியா ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத்தக்க PET (பாலி எத்தீலீன் டெரிப்தாலேட்) நெகிழி பாட்டில்களை செரிக்கிறது.
நெகிழியின் மேல் பாக்டிரியாவின் செயல்பாடு
\(2016\) இல் ஜப்பான் அறிவியலாளர்கள் PET- யை மறுசுழற்சி செய்யும் ஆலையில் கண்டறிந்தனர்.
இந்த பாக்டீரியா 'PETase' என்ற நொதியைச் சுரந்து PET என்ற நெகிழியினை சிறிய மூலக்கூறுகளாக சிதைத்து உணவாக உட்கொள்கின்றன.
நெகிழி உண்ணும் பாக்டீரியாவின் குறைபாடுகள்:
நெகிழி கழிவுகள் மிக அதிகமாக உருவாகின்றன. ஆனால் பாக்டீரியாவின் செயல்வேகம் குறைவாக இருப்பதால் இந்த முறை நெகிழிகளை முற்றிலுமாக ஒழிக்காது.
PET பாட்டில்கள்
இந்த பாக்டீரியா ரெசின் குறியீடு #1 கொண்ட நெகிழிகளை மட்டுமே சிதைக்கிறது. ஆனால் தற்போது அந்த வகை நெகிழிகள் மறுசுழற்சி செய்யத்தக்க நெகிழியாகவே தயாரிக்கப்படுகிறது. மற்ற ரெசின் குறியீடுகளை கொண்ட மறுசுழற்சி செய்ய இயலாத நெகிழிகளை இந்த பாக்டீரியா சிதைக்காது.