PDF chapter test TRY NOW
கண்ணாடியின் பயன்பாடு நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாதது. அவை கடினத்தன்மை கொண்டதாகவும் அதே சமயம் நொறுங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
கண்ணாடியின் பயன்பாடு - உடைந்த கண்ணாடி
கண்ணாடி தயாரிப்பு முறை:
கண்ணாடி ஒரு சீருறாத் திண்மம் (amorphous solid) என்றுஅழைக்கப்படுகிறது.
சிலிக்கான் -டை-ஆக்சைடை \(1700°C\) வெப்பநிலை அளவு உருக்கி, அதனுடன் சோடியம் கார்பனேட் சேர்த்து வேகமாக குளிர்விக்கும் பொழுது கண்ணாடி கிடைக்கிறது.
இதில் சிலிக்கா தனது படிக அமைப்பிற்கு திரும்பாமல் வேறோர் அமைப்பில் அணுக்கள் அமையப்பெறும். இந்த நிலையில் இது பலபடிகள் எனப்படுகிறது.
சோடா-லைம்-சிலிக்கா கண்ணாடி:
மணலினை மறுசுழற்சிக்கு என சேகரிக்கப்பட்ட கண்ணாடி,சோடியம் கார்பனேட் மற்றும் கால்சியம் கார்பனேட் கொண்டு கலந்து உலையில் இட்டு வெப்பப்படுத்தும் போது சோடா -லைம்-சிலிக்கா கண்ணாடி கிடைக்கிறது.
சோடியம் கார்பனேட் என்ற சோடா சாம்பல் மணலின் வெப்பநிலையினை குறைக்க உதவுகிறது.
கால்சியம் கார்பனேட் என்ற சுண்ணாம்புக்கல் உருவான கண்ணாடி நீரில் கரைவதை தடுக்கிறது.
இது நாம் அதிகம் பயன்படுத்தும் சாதாரணக் கண்ணாடி வகையாகும்.
நிறக் கண்ணாடிகள்:
வண்ணக்கண்ணாடிகள்
வேதிபொருட்களின் பண்புகளுக்கு ஏற்ப அதனை கண்ணாடியுடன் சேர்க்கும் பொழுது நிறக்கண்ணாடிகள் கிடைகின்றன.
இரும்பு மற்றும் குரோமியம் சார்ந்த வேதிபொருட்களை கண்ணாடி தயாரிப்பின் போது சேர்ப்பதனால் பச்சை நிறக் கண்ணாடி கிடைக்கிறது.
போர சிலிக்கேட் கண்ணாடி:
ஆய்வகத்தில் கண்ணாடி பயன்பாடு
உருகிய நிலையில் உள்ள கண்ணாடியுடன் போரான் ஆக்சைடினை சேர்ப்பதன் மூலம் கிடைக்கிறது.
எளிதில் வெட்டும் கண்ணாடி:
உருகுநிலை கண்ணாடியுடன் ஈய ஆக்சைடு சேர்க்கும் போது எளிதில் வெட்டக்கூடிய கண்ணாடி கிடைக்கிறது.
குண்டு துளைக்காத கண்ணாடி:
பல்வேறு அடுக்குகளில் நெகிழி மற்றும் கண்ணாடி என ஒன்று மாற்றி ஒன்று அடுக்குவதால் குண்டு துளைக்காத கண்ணாடி கிடைக்கிறது.
கடினக் கண்ணாடி:
உருகுநிலையில் உள்ள கண்ணாடியை மிக விரைவாக குளிரவைக்கும் பொழுது கடினக் கண்ணாடி கிடைக்கிறது.
இந்த வகை கண்ணாடிகள் காரில் உள்ள காற்று கவசங்களாகப் பயன்படுகிறது.
ஒளிசார் வண்ணக் கண்ணாடி:
கருப்புக்கண்ணாடிகள்
உருகுநிலை கண்ணாடியுடன் வெள்ளி அயோடினை சேர்க்கும் பொழுது பெறப்படும் கண்ணாடி ஒளிசார் வண்ணக்கண்ணாடி எனப்படும். இது சூரிய ஒளி மற்றும் பிற ஒளிகள் படும் போது கருமை நிறமாக மாறும்.
எனவே இந்தவகை கண்ணாடிகளை கண்களுக்கு பயன்படும் லென்சுகளின் தயாரிப்பிலும், கண் கவசங்களாகப் பயன்படும் கண்ணாடிகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.