PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
செல் சுவாசம் என்பது, செல்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள குளுக்கோஸைப் பயன்படுத்தி ஆற்றலை (ATP) வெளியிடுதல் ஆகும்.
இச்செயல்,செல்லின் சைட்டோபிளாசம் மற்றும் மைட்டோகான்ட்ரியாவில் நடைபெறுகிறது. இவ்வேதிவினைச் செயல்பாட்டிற்கு உந்துவினை செயலியான உயிரக்காற்று எனப்படும் ஆக்ஸிஜன் தேவைப்படும்.
 
ஆக்ஸிஜனின் தேவையைப் பொறுத்து செல் சுவாசம் இரு வகைப்படும்.
காற்றுள்ள சுவாசம்
உணவுப் பொருள்கள் முழுவதும் ஆக்ஸிகரணம் அடையும். இவ்வகையில், உயிரக்காற்று ஆக்ஸிஜனானது, குளுக்கோஸுடன் வினைப் புரிந்து, ஆற்றலை (ATP) வெளியிடுகிறது. மேலும், இறுதி பொருள்களாக நீர் மற்றும் கார்பன் டைஆக்ஸைடு CO_2 வெளியேறுகிறது.
 
Design - YC IND (19).png
காற்றுள்ள சுவாசம்
 
குளுக்கோஸ் + ஆக்ஸிஜன் \rightarrow கார்பன் டைஆக்ஸைடு + நீர் + ஆற்றல்
 
C_6H_{12}O_6 + 6O_2 \rightarrow 6CO_2 + 6H_2O + ATP
காற்றில்லா சுவாசம்
இம்முறையில், ஆக்ஸிஜன் தேவை இருப்பதில்லை. ஆகவே, உணவுப் பொருள்கள் பகுதியளவே ஆக்ஸிகரணம் அடைகின்றன. இந்த முறையில், இறுதியில் சிறிய அளவில் மட்டுமே ஆற்றல் வெளியிடப்படுகிறது. இறுதிப் பொருளாக, எத்தில் ஆல்கஹால் அல்லது மனிதர்களின் தசை நார்களில் லாக்டிக் அமிலம் மற்றும் கார்பன் டைஆக்ஸைடும் கிடைக்கின்றன.
 
பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவற்றில் இம்முறை சுவாசம் நடைப்பெறுகிறது.
 
1. எத்தில் ஆல்கஹால் உருவாதல்
 
Design - YC IND (16).png
காற்றில்லா சுவாசம் - எத்தில் ஆல்கஹால் உருவாதல்
 
குளுக்கோஸ்  \rightarrow எத்தில் ஆல்கஹால் + கார்பன் டைஆக்ஸைடு + ஆற்றல்
 
C_6H_{12}O_6 \rightarrow 2C_2H_5OH + 2CO_2 + 2ATP
 
2. லாக்டிக் அமிலம் உருவாதல்
 
Design - YC IND (18).png
காற்றில்லா சுவாசம் - லாக்டிக் அமிலம் உருவாதல்
 
குளுக்கோஸ்  \rightarrow லாக்டிக் அமிலம் + ஆற்றல்
 
C_6H_{12}O_6 \rightarrow 2C_3H_6O_3 + 2ATP
 
Important!
ஆற்றல் (ATP) வெளியீட்டின் அளவு
 
காற்றுள்ள சுவாசத்தின் இறுதியில் 36 ATP ஆற்றல் வெளியாகிறது. ஆனால், காற்றில்லா சுவாசதத்தில் 2 ATP மட்டுமே ஆற்றலாக வெளியேறும்.