PDF chapter test TRY NOW

உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையான வேதிவினைகளின் தொகுப்பு, வளர்சிதை மாற்றம் ஆகும்.
 
Design - YC IND (34).png
வளர்சிதை மாற்றம்
வேதி வினைகளின் மூலமாக, உணவு பொருளானது  சிறு சிறு துகள்களாக உடைக்கப்பட்டு, செல்களுக்கு தேவையான ஆற்றல் மற்றும் கழிவுப் பொருளாக வெளியேறுவது, வளர்சிதை மாற்றம் எனப்படும்.
வளர்சிதை மாற்றம் இரு வழிகளில் நடைபெறுகிறது. 
 
1. வளர் மாற்றம் (Anabolism)
வளர்மாற்றம் என்பது, எளிய மூலக்கூறுகள் இணைந்து, பெரிய மூலக்ககூறாக மாற்றப்படுவது ஆகும்.
Example:
குளுக்கோஸ் \rightarrow கிளைக்கோஜன் மற்றும் பிற சர்க்கரைகள்
அமினோ அமிலங்கள் \rightarrow நொதிகள் மற்றும் ஹார்மோன்கள், புரதங்கள்
கொழுப்பு அமிலங்கள் \rightarrow கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்
2. சிதை மாற்றம் (Catabolism)
ஒரு பெரிய மூலக்ககூறு, பல சிறிய மூலக்கூறுகலாக பிரிவது, சிதை மாற்றம் எனப்படும்.
Example:
கார்போஹைட்ரேட் \rightarrow குளுக்கோஸ்
குளுக்கோஸ் \rightarrow கார்பன் டைஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றல்
புரதம் \rightarrow  அமினோ அமிலம்
Design - YC IND (15).png
வளர்சிதை மாற்றம்