PDF chapter test TRY NOW
உயிரினங்களின் பல்லுயிர் தன்மை
நாம் வாழும் இவ்வுலகில் பல்லுயிர் தன்மை பெற்ற உயிரினங்கள் குழுக்குகளாகவும், தனித்தும் வாழ்கின்றன. கண்களுக்குப் புலப்படாத அமீபா முதல் உலகின் மிகப்பெரிய விலங்கினமான நீலத்திமிங்கலம் வரை விலங்குங்களின் பல்லுயிர் தன்மை நமக்கு புலப்படுகிறது. விலங்குகள் அளவில் மட்டும் அல்ல, மற்ற அளவிடுகளான செல், திசு, உடல் அமைப்பு போன்றவற்றிலும் பலவாறு வேறுபடுகின்றன.
உயிரினங்களின் பல்லுயிர் தன்மை
இவைகள், செல்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு செல் மற்றும் பல செல் உடையவை என வகைப்படுத்தப்படுகின்றன.
Example:
அமீபா, ஈஸ்ட், பாக்டீரியா, வைரஸ்
மேலும், உயிரின கட்டமைப்பின் அடிப்படையில், புரோகேரியாட்டுகள் மற்றும் யூகேரியாட்டுகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
- புரோகேரியாட்டுகள் - அமீபா, ஈஸ்ட், பாக்டீரியா
- யூகேரியாட்டுகள் - விலங்குகள், பூஞ்சைகள், தாவரங்கள்
Example:
உயிரியல் ஒருங்கமைவு
உயிரியல் ஒருங்கமைவு என்பது, மிக நுண்ணிய மூலக்கூறு அமைப்பான அணுக்களில் தொடங்கி, மிகப் பெரிய அளவான சூழ்நிலை மண்டலம் மற்றும் இறுதியில் உயிர்க்கோளத்தில் நிறைவடைகிறது.
அணுக்கள் ஒன்றிணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இம்மூலக்குறுகள் செல்களாகவும், பின்பு ஒரே மாதிரியான செல்கள் இணைவதன் மூலம் திசுக்கள் உருவாக்குகின்றன.
உயிரினங்களின் ஒருங்கமைவு
திசுக்கள் ஒருங்கிணைந்து, ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யக்கூடிய நுண்ணுறுப்புகளாக உருவாகின்றன. பிறகு, நுண்ணுறுப்புகள், உறுப்பு மண்டலங்களாகவும், உறுப்பு மண்டலங்கள் இணைவதன் மூலம் உயிரினம் உருவாகுகின்றது.
இதைப்போன்றே பலவிதமான படிநிலைகள் கடந்து, இறுதியில் சூழ்நிலை மண்டலத்தில் முடிகிறது. உயிரியல் ஒழுங்கமைப்பின் பல்வேறு படிநிலைகளைப் பற்றி இப்பாடப் பகுதில் காணலாம்.