PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயல் அலகு செல் எனப்படுகிறது. இவை, உயிரினங்களின் கட்டுமான அலகுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
Important!
செல்களைப் பற்றிய படிக்கும் அறிவியல் பிரிவு செல் உயிரியல் (Cytology) எனப்படும்.
செல்களை வேற்று கண்களால் காண இயலாது. இவற்றை நுண்ணோக்கி எனும் கருவியின் மூலம் மட்டுமே காண இயலும்.
அமைப்பு
செல்கள் செல் சவ்வு எனும் மெல்லிய உறையினால் சூழப்பட்டுள்ளது. இதன் உள்ளே, சைட்டோபிளாசம் காணப்படுகிறது.
சைட்டோபிளாசம், என்பது ஒரு கூழ்மப் பொருளாகும். இந்த சைட்டோபிளாசத்தில்,செல்களின் அடிப்படைத் தேவைகளான புரதங்கள், அமிலங்கள், உயிரியல் முலக்கூறுகளான டி. என். ஏ உட்கருவின் உள்ளே காணப்படுகிறது.
1024px-Cell_structure.jpg
விலங்கு செல்லின் அமைப்பு
 
மேலும், செல்களில் உட்கருவுடன் மைட்டோகான்டிரியா, கோல்கை உடல்கள், எண்டோபிளாசமிக் வலைப்பின்னல், சென்ட்ரியோல்கள், ரிபோசோம்கள் மற்றும் பல செல் உடலங்கள் (நுண்ணுறுப்புகள்) காணப்படுகின்றன.  
வகைப்பாடு
செல்களை அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
  • அளவு
  • வடிவம்
  • எண்ணிக்கை
  • உட்கரு
அளவின் அடிப்படையில் வகைப்பாடு
செல்கள் அனைத்தும் ஒரே அளவில் இருப்பதில்லை. அவை, செயல் மற்றும் பண்பிணைப் பொறுத்து பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.
செல்களின் அளவை அளக்கப் பயன்படும் அலகு மைக்ரான் \(\mu\) எனப்படும்.
Design - YC IND (6).png
அளவின் அடிப்படையில் செல்களின் வகைப்பாடு
 
செல்கள் 0.5 \(\mu\) முதல் 20 \(\mu\) விட்டம் வரை வேறுப்பட்டு உள்ளன. சில செல்களின் அளவுகள் பின்வருமாறு:
  • மிகச் சிறிய செல் (மைக்கோபிளாஸ்மா): \(0.2 - 0.3\) \(\mu m\)
  • பாக்டீரியா செல்லின் அளவு: \(1 - 2\) \(\mu m\)
  • மனித இரத்த சிவப்பு அணுக்கள்: \(7\) \(\mu m\) விட்டம்
  • மனித நரம்பு செல் (மிக நீண்ட செல்): \(90 - 100\) மீ
  • மனித அண்ட செல்: \(100\) \(\mu m\)
  • மிகப் பெரிய ஒரு செல் (நெருப்புக் கோழியின் முட்டை): \(170 -180\) மிமீ
வடிவம் அடிப்படையில் வகைப்பாடு
வடிவத்தின் அடிப்படையில் செல்களைப் பல்வேறு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
 
Design - YC IND (5).png
மனித செல்கள்
 
அவை பின்வருமாறு:
  • உருண்டை அல்லது முட்டை: மனித இரத்த சிவப்பு அணுக்கள்
  • சுருள் வடிவம்: மனித தசைச் செல்கள்
  • கிளைகள் உடையவை: மனித நரம்பு செல்கள்
  • உருவமற்றவை: மனித இரத்த வெள்ளை அணுக்கள்
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Cell_structure.jpg