PDF chapter test TRY NOW
உடற்செயலியல் செயல்பாடு என்பது, ஒரு உயிரினத்தின் உயிர் மூலக்கூறுகள், செல்கள், திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டு, அவ்வுயிரினம் வாழ்வதற்கான செயல்பாடுகள் ஆகும்.
அவையாவன,
- தன்னிலைக் காத்தல்
- விரவல்
- சவ்வூடு பரவல்
- ஊடுபரவல் ஒழுங்குபாடு
- செல் சுவாசம்
- வளர்சிதை மாற்றம்
தன்னிலைக் காத்தல்
ஓரு உயிரினம், உயிர் வாழ்வதற்கு ஏற்றவாறு உடலியல் மண்டலங்கள் மூலம், உடலின் உட்புறச் சூழலை சமநிலையுடன் பாராமரிப்பது, தன்னிலைக் காத்தல் எனப்படும்.
இது, சாத்தியமாவது நடத்தை சார் மற்றும் உடற்செயலியல் துலங்கல் ஆகிய ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகள் ஆகும்.
தன்னிலைக் காத்தலின் முக்கியத்துவம்
எடுத்துக்காட்டாக, வெப்பச் சமநிலைப் பற்றிக் காணலாம். வெப்பச் சமநிலைப் பொறுத்து, உயிரினங்களை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை,
வெப்ப இரத்த பிராணிகள்
பாலூட்டிகள் வெப்ப இரத்த பிராணிகளாகும். அதாவது, சுற்றுப்புறச் சூழ்நிலையில் உள்ள வெப்பத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டாலும், தங்களின் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் திறன் கொண்ட உயிரிகள் ஆகும்.
Example:
மனிதர்கள், தங்களின் உடல் வெப்பநிலைக் குறையும் பொழுது, தசைச் செயல்பாடு மற்றும் நடுக்கத்தின் மூலம் வெப்பம் உற்பத்தி செய்து உள்சூழ்நிலையை சமநிலையுடன் வைத்துக்கொள்கிறார்கள்.
குளிர் இரத்த பிராணிகள்
குளிர் இரத்த பிராணிகள், தங்கள் உடலின் வெப்பநிலையைச் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சமநிலைச் செய்ய இயலாதவை.
ஆகையால், தன்னிலைக் காத்தல் என்பது, ஒரு உயிரினத்தின் வாழ்வதற்கு தேவையான உள் சூழ்நிலைப் பாராமரிப்பது ஆகும். இவை, ஒழுங்குமுறையுடன் செயல்படும் பொழுது வாழ்க்கைத் தொடர்கிறது, இல்லையெனில், இறப்பு அல்லது பேரழிவு உண்டாகிறது.
- மேலும், தன்னிலைக் காத்தலைக் நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகள் கட்டுப்படுத்துகின்றன.
- சீரான உடல்நிலையை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை, தானியங்கு நரம்பு மண்டலம் ஆகிய உறுப்புகள் ஒழுங்குபடுத்துகின்றன.
மற்றொரு எடுத்துக்காட்டு, இரத்த சர்க்கரையின் அளவு ஆகும். இது, சாத்தியமாவது, இன்சுலின் மற்றும் குளுக்கோகான் என்ற ஹார்மோன்களின் செயல்பாடுகள் மூலம் ஆகும்.
இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது, இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, குளுக்கோஸ், கிளைக்கோஜனாக மாற்றமடைந்து செல்களில் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால், சர்க்கரையின் அளவு குறையும் பொழுது, குளுக்கோகான் ஹார்மோனின் உற்பத்தியின் மூலம், சேமித்து வைக்கப்பட்ட கிளைக்கோஜன், மீண்டும் குளுக்கோஸாக மாற்றம் அடைந்து சமன் செய்யப்படுகிறது.