PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தேவையான பொருள்கள்
  • \(Y\) வடிவ குழாய்
  • ஒரு பெரிய பலூன்
  • இரு சிறிய பலூன்கள்
  • ஒரு லிட்டர் நெகிழி பாட்டில் (Plastic bottle)
  • தக்கை
உருவாக்கும் முறை
  • ஒரு பாட்டிலின் பாதியில் குறுக்காக வெட்டவும்.
  • இரு சிறிய பலூன்களை, \(Y\) வடிவ குழாயின் இருபுறமும் பொருத்தவும்.
  • \(Y\)  வடிவக் குழாயினை, தக்கையின் மையத்தில் ஏற்படுத்தப்பட்ட துளையில் பொருத்தவும்.
  • பெரிய பலூனைஇரண்டாக வெட்டி வைத்துக் கொள்க.
  • இப்பலூனை, நெகிழிப் பாட்டிலின் திறந்த முனையோடு இறுக்கமாகக் கட்டவும்.
shutterstock1448058053.jpg
உருவாக்கும் முறை விளக்கப் படம்
வேலை செய்யும் விதம்
  • நெகிழிப் பாட்டிலின் திறந்த முனையோடு கட்டப்பட்டுள்ள பெரிய பாலூனின் மையப் பகுதியை கீழே படத்தில் காட்டியுள்ளதுப் போல், கீழ் நோக்கி இழுக்கவும்.
  • இப்பொழுது, பாட்டிலின் உட்புறத்தில் இணைக்கப்பட்டுள்ள பலூன்களில் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.
  • பெரிய பலூனை கீழே இழுப்பதால், உள்ளிருக்கும் இரு பலூன்களில் அழுத்தம் அதிகரித்து, விரிவடைகின்றன. இது, உள்சுவாசத்தின் போது, நம் சுவாச மண்டலங்களில் ஏற்படும் மாற்றங்களைக் குறிக்கிறது.
  • அடுத்து, கீழே இழுக்கப்பட்ட, பெரிய பலூனை விடுவிப்பதன் மூலம், பாட்டிலின் உட்புறம் அழுத்தம் குறைந்து, \(Y\) வடிவக் குழாயில் கட்டப்பட்டுள்ள இரு பலூன்களும், பழைய நிலையை அடைகின்றன. இது, வெளிசுவாசத்தைக் குறிக்கிறது.
Design - YC IND (13).png
செய்முறை விளக்கப் படம்
மனித நுரையீரல் மற்றும் செயற்கை நுரையீரல் ஒற்றுமைகள்:
மனித நுரையீரல்
செயற்கை நுரையீரல்
மூச்சக்குழாய் மற்றும் மூச்சக் கிளைக்குழாய்கள்\(Y\) வடிவ குழாய்
மார்பறைக் குழிநெகிழி பாட்டில்
நுரையீரல்கள்இரு சிறிய பலூன்கள்
உதரவிதானம்பெரிய பலூன்