PDF chapter test TRY NOW

பல்வேறு உறுப்புகள் ஒன்றிணைந்து உறுப்பு மண்டலம் உருவாகிறது.
உறுப்பு மண்டலம், என்பது ஒரே விதமான பணியைச் செய்யும் பல உறுப்புகள் ஒன்றிணைந்து, ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வது ஆகும்.
Design - YC IND (10).png
மனித உறுப்பு மண்டலம்
    Example:
  • இரத்த சுற்றோட்ட மண்டலம் என்பது,  இதயம் மற்றும் இரத்தக் குழல்களால் இயங்குகிறது.
  • சுவாச மண்டலத்தில், மூக்கு, தொண்டை, சுவாசக்குழாய், நுரையீரல்கள் மற்றும் உதரவிதானம் ஆகிய உறுப்புகளால் இணைந்தது.
  • செரிமான மண்டலமும் வாய், உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல், பெருங்குடல் மற்றும் பல உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது.
  • கழிவு நீக்க மண்டலத்தில், சிறுநீரகம், சிறுநீர்ப் பை, சிறுநீர் குழாய் போன்ற உறுப்புகள் உள்ளன.
இவை யாவும், சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இவற்றில், நாம் சுவாச மண்டலம் பற்றி விரிவாகக் காண இருக்கிறோம்.
சுவாச மண்டலம்
சுவாச மண்டலத்தின் முக்கிய பணி, நாம் சுவாசிக்கும் காற்றைச் சுத்தம் செய்து, இரத்த சுற்றோட்ட மண்டலம் மூலம் உடலின் மற்ற பாகங்களுக்குப்பரிமாறுதல் ஆகும். இம்மண்டலத்தில் உள்ள உறுப்புகளையும், அவற்றின் பணிகளைப் பற்றி இனி விரிவாகக் காணலாம்.
 
Design - YC IND (11).png
மனித சுவாச மண்டலம்
 
மூக்கு (Nose)
 
மூக்கு என்பது, நாசித் துளை மற்றும் நாசிக்குழி ஆகியவைச் சேர்ந்தது ஆகும்.
 
நாசித் துளை (Nostrils)
  • நாசித் துளை வழியே காற்று உள்ளேயும், வெளியேயும் செலுத்தப்படுகிறது.
நாசிக்குழி (Nasal cavity)
  • நாசித் துளைகள், நாசிக்குழியாகத் தொடர்கிறது. நாசிக்குழியின் உட்புறச் சுவர் நுண்ணிய ரோமங்களாலும், கோழைச் சுரக்கும் செல்களாலும் ஆனது.
  • ரோமங்கள் மற்றும் கோழை, நாசிக்குழி மற்றும் சுவாசப் பாதையினை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகின்றன.
  • ரோமமும், கோழையும் உள்ளிழுக்கும் காற்றில் உள்ள மாசுகளையும் மற்றும் நுண்ணுயிரிகளையும் வடிக்கட்டுகின்றன.
  • மூக்கில் உள்ள இரத்த நாளங்கள், உள்ளிழுக்கும் காற்றை வெப்பமாக வைக்க உதவுகின்றன.
தொண்டை (Pharynx)
  • நாசிக்குழியை அடுத்து, உள்ளிழுக்கபட்ட காற்று, தொண்டையினில் நுழைகிறது.
  • இது, நாசிக்குழியையும் மற்றும் மூச்சுக்குழாயையும் (trachea) பிரிக்கும் பகுதி ஆகும்.
குரல் வளை (Larynx)
  • இது, தொண்டை மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றின் இடையே அமைந்துள்ள பகுதியாகும். மேலும், இணைப்புத் தசை மடிப்புகளால் ஆனது.
  • காற்று நுழையும்போது, குரல் வளை அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.
மூச்சுக் குழாய் (Trachea)
  • மூச்சுக் குழாய் மீள் தன்மைக் கொண்ட, கழுத்து முழுவதும் மற்றும் மார்பாறையின் பாதி வரையில் நீண்ட குழாய் ஆகும்.
  • மேலும் இது, நுரையீரல்கள் உள்ளே நுழையும் பொழுது இரு கிளைகளாகப் பிரிகிறது.