PDF chapter test TRY NOW
கண்ணின் உள்ளமைப்பில் பின்வரும் பாகங்கள் அமைந்துள்ளன.
- லென்சு
- விழித்திரை
- பார்வை நரம்பு
- அக்குவஸ் திரவம் (முன் கண்ணறை திரவம்)
- விட்ரியஸ் திரவம் (பின் கண்ணறை திரவம்)

கண்ணின் உள்ளமைப்பு
லென்சு
- லென்ஸின் முக்கிய பணி, கார்னியாவுடன் இணைந்து, கண்ணின் உள்ளே நுழையும் ஒளியை விலகடையச் செய்கிறது. இதனால், பிம்பம் உருவாகிறது.
- மேலும், இது இரு குவியம் கொண்ட, ஒளி ஊடுருவும் தன்மைக் கொண்ட பாகம் ஆகும்.
- லென்சு, புரதங்களால் உருவானது.
விழித்திரை (Retina)
- இதன் பணி, பிம்பங்களை உருவாக்குதல் ஆகும்.
- இது, கண்ணின் பின்புறத்தில் அமைந்துள்ளது.
- மேலும், இது ஒளிக்கதிர்களை மின் தூண்டல்களாக மாற்றி, பார்வை நரம்பின் வழியே, மூளைக்கு அனுப்புகிறது.
- இதில், நிறங்களை பிரித்து பார்ப்பதற்கான செல்கள் உள்ளன.
பார்வை நரம்பு (Optic nerve)
- இது, விழித்திரையின் பின் புறத்தில் அமைந்து உள்ளது.
- இவை, இயக்கு நரம்பு (motor neuron) ஆகும்.
- பார்வை நரம்பு, விழித்திரையின் உதவியுடன் நரம்புத் தூண்டல்களை மூளைக்கு எடுத்துச் செல்லும் மிக முக்கிய பணியைச் செய்கிறது.
அக்குவஸ் திரவம் (முன் கண்ணறை திரவம்)
- லென்சுக்கும், விழி வெண்படலத்துக்கும் (கார்னியா)இடையே உள்ள திரவப் பொருள் ஆகும்.
- மேலும், இது இவ்விருப் பகுதிக்கும் ஊட்டமளிக்கிறது.
விட்ரியஸ் திரவம் (பின் கண்ணறை திரவம்)
- விட்ரியஸ் திரவம் அரைத்திண்ம, ஒளி ஊடுருவும் தன்மைக் கொண்ட கொழகொழப்பான பொருளாகும்.
- இது, கண்ணின் உட்பகுதி முழுவதும் நிறைந்து, கண்ணின் வடிவத்தைப் பாதுகாக்கிறது.
- மேலும், இது ஒளியை, விழித்திரையை அடையும்முன் விலகடையச் செய்கிறது.
இது வரை நாம், மனித உடலின் உறுப்புகளைப் பற்றியும், மேலும் அதில் முக்கிய உறுப்பான கண்ணின் அமைப்பு மற்றும் செயல்கள் பற்றிக் கண்டோம்.
இனி, உறுப்பு மண்டலம் பற்றி பின்வரும் பகுதியில் விரிவாகக் காணலாம்.