PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சுவாசச் செயலியல் (Breathing) வாயுப் பரிமாற்றம் என்பது உள்சுவாசம் மற்றும் வெளிச் சுவாசம் ஆகிய இரு செயல்கள் மூலம் நடக்கிறது.
Clavicularbreathing.gif
சுவாசச் செயலியல்
 
உள்சுவாசம் (inspiration/inhalation)
நுரையீல்களுக்கு காற்றை எடுத்துச் செல்லும் நிகழ்வு, உள்சுவாசம் எனப்படும்.
உள்சுவாத்தின் போது, பின் வரும் நிகழ்வுகள் நிகழ்கின்றன. அவை,
  • மார்பெலும்பு மேல் நோக்கியும் மற்றும் வெளிநோக்கியும் விரிவடையும்.
  • உதரவிதானம் கீழ்நோக்கி தள்ளப்படும்.
இவற்றினால், மார்'பறையின் கொள்ளளவு அதிகரித்து, நுரையீலின் மீது அழுத்தம் குறைவதால், வெளிக்காற்று நுரையீரல்களினுள் நுழைகின்றது.
 
Design - YC IND (14).png
உள்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசம்
 
வெளிச்சுவாசம் (expiration/exhalation)
நுரையீரல்களிருந்து காற்று வெளியேறுவது, வெளிச்சுவாசம் எனப்படும்.
இச்சுவாத்தின் போது, நிகழும் நிகழ்வுகள் பின்வருமாறு.
  • நுரையீரல்கள், காற்றை அதிக விசையுடன் வெளித்தள்ளுகின்றன.
  • விலா எலும்பிடைத் தசைகள் மீட்சியடைவாதல், மார்பறையின் சுவர், பழைய நிலைக்கு திரும்புகிறது.
  • உதரவிதானமும், மீட்சியடைந்து, மேல் நோக்கி குவிந்து பழைய நிலையை அடைகிறது.
இதன், அழுத்தம் காரணமாகவும், மேலும் வளி மண்டலத்தின் அழுத்த வேறுபாட்டாலும் காற்று அதிக விசையுடன் வெளியேறுகிறது.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Clavicular_breathing.gif