PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காற்று நுண்ணறைகளில் வாயுப் பரிமாற்றம்
காற்று நுண்ணறைகளில், ஆக்ஸிஜனின் அளவு, அவற்றை சூழ்ந்துள்ள இரத்தக் குழல்களை விட அதிகமாக இருக்கும். ஆனால், கார்பன் டைஆக்சைட்டின் அளவு இதற்கு எதிர்மறையாக இருக்கும். இவற்றை, சமநிலைச் செய்வது, எளிய பரவல் எனும் நிகழ்வு ஆகும்.
எளிய பரவல் என்பது, அதிக செறிவு உள்ள பகுதியிலிருந்து குறைந்த செறிவுள்ள பகுதிக்குப் பொருட்கள் (வாயு, திரவம் அல்லது திடமான) பாய்வது ஆகும்.
இங்கு, எளிய பரவல் மூலம், \(O_2\) நுரையீரலில் இருந்து, இரத்தக் குழல்களுக்கும், \(CO_2\) இதற்கு எதிர்மறையாக நுண்ணறைகளில் இருந்து பரவி நுரையீரல் வழியே வெளியேறுகிறது.
 
Design - YC IND (12).png
காற்று நுண்ணறைகளில் வாயுப் பரிமாற்றம்
  
Important!
இரத்ததில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்ஸிஜனுடன், இணையும் பொழுது ஆக்ஸிஹீமோகுளோபினாக மாறும். அதேப் போல், கார்பன் டைஆக்சைடுடன் இணையும் போது, கார்பமைனோஹீமோகுளோபினாக மாறுகிறது.
தும்முவதன் காரணம்
நாம் உள்ளிழைக்கும் காற்றில், பலவிதமான மாசுகளும், நுண்ணுயிரிகளும் மேலும் மகரந்தத் தூள்களும் கலந்து இருக்கும். இவை, மூக்கின் வழியே நுழையும் போது, அங்குள்ள ரோமங்களால், சுத்திகரிக்கப்பட்டு தும்மல் மூலம் வெளியேற்றப்படுகிறது. மேலும், நாம் தும்மும் பொழுது, மூக்கின் நாசித் துளைகளை கைக்குட்டையால் மூடிக் கொள்வதால், பிறர்க்கு பரவாமல் தடுக்கலாம்.
 
shutterstock_1642874140.jpg
தும்மும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
புகைப்பிடித்தல் மற்றும் புற்றுநோய்
புகைப்பிடிப்பதால் நுரையீரல்கள் சேதப்படுகின்றன. இது, நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
 
shutterstock_570778996.jpg
ஆரோக்கியமான நுரையீரல் மற்றும் புற்றுநோய் பாதித்த நுரையீரல்