PDF chapter test TRY NOW

நாம் இருக்கும் சுற்றுச்சூழல் நமக்கு, சுவாசிக்க காற்றையும், குடிக்க நீரையும், உணவு உற்பத்திக்குத் தேவையான நிலத்தையும் கொடுத்து உள்ளது.
 
hintersee-gd96974a0b_1920.jpg
சுத்தமான சுற்றுச்சூழல்
 
மாசுபடுதல்
அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின்  செயல்பாடுகளால் நம் சுற்றுச்சூழலில் விரும்பத்தகாத இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்நிகழ்வே மாசுபடுதல் ஆகும்.
மாசுபடுதலை ஏற்படுத்தும் காரணிகள் மாசுபடுத்திகள் ஆகும்.
 
BeFunkycollage17w3259 (1).jpg
மாசுபடுத்திகள்
 
மாசுபடுதல் மூன்று வகைப்படும், அவை:
  • காற்று மாசுபாடு
  • நீர் மாசுபாடு
  • நில மாசுபாடு
அதிகரித்து வரும் மனித செயல்பாடுகளால் அதிகளவு வேதிப்பொருள்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டு அவை உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருள்களைப் பாதிக்கின்றன.
 
காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு என்பது காற்றின் இயற்கையான பண்புகளை மாற்றியமைக்கும் வேதியியல் அல்லது உயிரியல் மூலக்கூறுகளால் காற்றின் சூழலை மாசுபடுத்துவதாகும்.
shutterstock1015328077.jpg
காற்று மாசுபடுதல்
  
காற்று மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள்
  • கார்பன் டை ஆக்ஸைடு
  • கார்பன் மோனாக்சைடு
  • சல்பர்  ஆக்சைடுகள் 
  • நைட்ரஜன் ஆக்சைடுகள்
  • குளோரோ புளோரோ கார்பன்கள்
  • மீத்தேன்
காற்று மாசுபடுதலின் விளைவுகள்
  • அமில மழை
  • புவி வெப்பமாதல்
  • சுவாச கோளாறுகள்.
நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு என்பது நீரின் இயற்கையான பண்புகளை மாற்றியமைக்கும் வேதியியல் அல்லது உயிரியல் மூலக்கூறுகளால் நீரின் சூழலை மாசுபடுத்துவதாகும்.
shutterstock52039417.jpg
நீர் மாசுபடுதல்
 
நீர் மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள்:
  • வேதிப்பொருள்களை கொண்ட கழிவு நீர் (சாய பட்டறைகள்)
  • டிடர்ஜென்ட்டுகள்
  • கச்சா எண்ணெய்கள்
நீர் மாசுபடுதலின் விளைவுகள்
  • நீரின் தரம் குறைந்து போவது
  • தோல் வியாதிகள்
நில மாசுபாடு
நில மாசுபாடு என்பது நிலத்தின் இயற்கையான பண்புகளை மாற்றியமைக்கும் வேதியியல் அல்லது உயிரியல் மூலக்கூறுகளால் நிலத்தின் தன்மையை மாசுபடுத்துவதாகும்.
shutterstock739682386.jpg
நிலம் மாசுபடுதல்
 
நிலம் மாசுபடுதலை ஏற்படுத்தும் வேதிப்பொருள்கள்
  • யூரியா போன்ற உரங்கள்
  • பூச்சிக்கொல்லிகள்
  • களைக்கொல்லிகள்
நிலம் மாசுபடுதலின் விளைவுகள்
  • விவசாய நிலம் கெட்டுப் போதல்
  • புற்றுநோய்கள்
  • சுவாச நோய்கள்