PDF chapter test TRY NOW
ஒவ்வொரு வேதி
வினையும் நிகழ்வதற்கு
சில குறிப்பிட்ட சூழ்நிலை தேவை
என்பதை நீங்கள் அறிவீர்கள்.
வேதிவினைகள் நிகழும்போது
வெப்பம், ஒளி, ஒலி, அழுத்தம்
போன்றவை உருவாவதோடு
வேறுசில விளைவுகளும் உருவாகின்றன.
உயிரியல் விளைவுகள்
நுண்ணுயிரிகள் மூலமாக அதிலிருந்து வரும் என்சைம் என்ற உயிரி வினைவேகமாற்றி , சுற்றுச்சூழலாலும், மற்றும் சமுதாயத்தாலும் ஏற்படும் விளைவுகளே உயிரியல் விளைவுகள் எனப்படும்.
உணவு மற்றும் காய்கறிகள் கெட்டுப்போதல்
உணவு கெட்டு போதல் என்பது, மனிதன் உண்ண முடியாத நிலைக்கு உணவு மாறுவதே ஆகும். இது என்சைம் என்ற உயிரி வினைவேக மாற்றி மூலமாக நடைபெற்று, துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்ட சத்து இழப்பு போன்றவை ஏற்படுகின்றன.
காய்கறிகள் கெட்டுப்போதல்
Example:
காய்கறிகள் மற்றும் பழங்கள் நுண்ணுயிரிகளால் கெட்டுப்போதல், ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதனால் தான் அழுகிய முட்டையில் துர்நாற்றம் அடிக்கிறது.
இறைச்சி மற்றும் மீன் துர்நாற்றமடித்தல்
மீன் மற்றும் இறைச்சியில் அதிகமாக பலபடி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது காற்று அல்லது ஒளியுடன் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்பட்டு துர்நாற்றம் வருகிறது, இந்நிகழ்வே துர்நாற்றமடித்தல் (ஊசிப்போதல்) என்று அழைக்கப்படுகின்றன.
இறந்து போன மீன்
Example:
கரையில் காணப்படும் கெட்டுப்போன அல்லது இறந்து போன மீன்
நறுக்கிய காய்கறிகள் மற்றும் ஆப்பிள் பழுப்பு நிறமாதல்
நறுக்கிய ஆப்பிள் மற்றும் காய்கறிகள் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் உடன் ஏற்படும் வேதிவினையினால் பழுப்பு நிறம் அடைகின்றன, இந்நிகழ்வே பழுப்பாதல் ஆகும்.
காய்கறிகள் மற்றும் ஆப்பிள் பழுப்புநிறமாதல்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பாலிபீனால் ஆக்ஸிடேஸ் அல்லது டைரோசினேஸ் என்ற என்சைம் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் உடன் வினைபுரிந்து அதன் பீனாலிக் சேர்மங்களை மெலனின் என்ற பழுப்பு நிறமிகளாக மாற்றுகிறது.