PDF chapter test TRY NOW
நாம் முன் வகுப்புகளில் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களை பற்றி அறிந்தோம். இப்பொழுது வேதி மாற்றங்கள் மற்றும் அந்த மாற்றத்தினை நிர்ணயிக்கும் காரணிகள், மற்றும் அதன் விளைவுகள் பற்றி விரிவாக அறியலாம்.
வேதியியல் மாற்றங்கள்
நிரந்தரமான, மீளாத்தன்மை உடைய மற்றும் ஒரு புதிய பொருளை உருவாக்கும் மாற்றமே வேதி மாற்றம் ஆகும். இதன் மூலம் உருவாகும் புதிய பொருள் மீண்டும் பழைய நிலையை அடைய இயலாது. எனவே இது ஒரு நிரந்தர மாற்றம் ஆகும்.
காகிதம் மற்றும் தீக்குச்சி எரிதல் , உணவு சமைத்தல் மற்றும் செரித்தல், பால் தயிராக மாறுதல், காய்கறிகள் கெட்டுப்போதல் மற்றும் பல நிரந்தர மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாகும்.
தீக்குச்சி எரிதல்
தீக்குச்சி எரியும் பொழுது அது முழுவதுமாக வினையில் ஈடுபட்டு சாம்பலாக மாறுகிறது. இதன் மூலம் உருவாகும் சாம்பலின் வேதி மூலக்கூறுகள் முற்றிலும் மாறுபட்டவை ஆகும்.


தீக்குச்சி எரிதல்
ரொட்டி தயாரித்தல்
மாவில் இருந்து ரொட்டி தயாரித்த பிறகு, அதனை மீண்டும் மாவாக மாற்ற இயலாது. எனவே இதுவும் வேதிமற்றமாகும்.


ரொட்டி தயாரித்தல்