PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வேதி மாற்றங்கள், வேதி வினைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் இதில் ஒன்று அல்லது பல பொருள்கள் வினைபுரிந்து புதிய பொருட்களை உருவாக்குகின்றன.
 
வினையில் ஈடுபடும் பொருள்களை வினைபடு பொருள்கள் என்றும், வினையின்  மூலம் உருவாகும் பொருள்களை, வினைவிளை பொருள்கள் என்றும் அழைக்கின்றோம்.
 
0z4pmvvb210119ss4mpgeneratedw1920.jpg
வேதியியல் மாற்றங்கள்
 
\(A + B \rightarrow AB\)
 
(வினைபடு பொருள்(கள்)) \(\rightarrow\) (வினைவிளை பொருள்(கள்))
 
வேதி மாற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள்
  
வேதிமாற்றங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் நடைபெறாது. ஒரு வேதிவினை நடைபெற சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் வேண்டும். வேதிவினைகள் கீழ்க்காணும் பல்வேறு சூழ்நிலைகளில் நிகழலாம்.
 
BeFunkycollage.jpg
வேதியியல் மாற்ற காரணிகள்
  • இயல்பான நிலையில் சேர்தல்
  • வினைபடு பொருள்களின் கரைசல்
  • மின்சாரம்
  • வெப்பம்
  • ஒளி
  • வினைவேகமாற்றி