PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கோளக ஆடிகள் தொடர்பான சொற்கள்:
 
கோளக ஆடிகளால் தோன்றும் பிம்பங்களைப் பற்றி புரிந்துகொள்ள அவை தொடர்பான சில சொற்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 
வளைவு மையம்:

வளைவு மையம் என்பது எந்தக் கோளத்திலிருந்து ஒரு ஆடி உருவாக்கப்படடதோ, அந்தக் கோளத்தின் மையம் ஆகும்.  இது கதிர் வரைபடங்களில் \(C\) எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்படுகிறது (கதிர் வரைபடங்கள் கோளக ஆடியினால் உருவாக்கப்படும் பிம்பங்களைக் குறிப்பிடுகின்றன. இவற்றைப் பற்றி நீங்கள் மேல் வகுப்பில் பயில்வீர்கள்).
 
ஆடி மையம்:
இது கோளக ஆடியின் வடிவியல் மையம் ஆகும். இது \(P\) எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.
 
வளைவு ஆரம்:

வளைவு ஆரம் என்பது கோளத்தின் மையத்திற்கும் அதன் ஆடி மையத்திற்கும் இடையே உள்ள தொலைவாகும். கதிர் வரைபடங்களில் இது \(R\) எனும் ஆங்கில எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.
 
முதன்மை அச்சு:
முதன்மை அச்சு என்பது ஆடி மையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் நேர்க்கோடு ஆகும்.
 
குவியம்:

ஒரு ஒளிக்கற்றையானது ஒரு கோளக ஆடியில் பட்டு எதிரொளித்து பின் முதன்மை அச்சின் ஒரு புள்ளியில் குவியும் (குழி ஆடி) அல்லது முதன்மை அச்சின் ஒரு புள்ளியிலிருந்து விரிந்து செல்வது போல் (குவி ஆடி) தோன்றும். அப்புள்ளியே, முதன்மைக் குவியம் அல்லது குவியம் என அழைக்கப்படுகிறது. இதனைக் குவியப்புள்ளி எனவும் அழைக்கலாம். கதிர் வரைபடத்தில் இது \(F\) என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.
 
குவிய தொலைவு:
குவிய தொலைவு (\(f\)) என்பது ஆடி மையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஆகும்.
 
கோளக ஆடியின் குவிய தொலைவிற்கும். வளைவு ஆரத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. குவிய தொலைவானது வளைவு ஆரத்தில் பாதியாக இருக்கும்.
 
குவிய தொலைவு=வளைவு ஆரம்2
 
4.png
கோளக ஆடிகள் தொடர்பான சொற்கள்