PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள்:
கோளக ஆடிகளில் தோன்றும் பிம்பங்கள் இரண்டு வகைப்படும். அவை:
- மெய் பிம்பம்
- மாய பிம்பம்
மெய் பிம்பங்களை திரையில் பிடிக்க இயலும். ஆனால் மாய பிம்பங்களை திரையில் பிடிக்க இயலாது.
குவி ஆடிகளால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்கள்:
குவி ஆடிகளால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்கள் எப்பொழுதும் நேரான, அளவில் சிறிய மாயபிம்பங்களாகவே இருக்கும். எனவே, இவ்வகை ஆடிகளால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களைத் திரையில் வீழ்த்திப் பிடிக்க இயலாது.
குவி ஆடி
குவி ஆடியினால் தோன்றும் பிம்பத்தின் அளவு மற்றும் தன்மை அட்டவணை 1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
பொருளின் நிலை | பிம்பத்தின் நிலை | பிம்பத்தின் அளவு | பிம்பத்தின் தன்மை |
ஈறிலாத் தொலைவில் | \(F\) இல் | புள்ளி அளவிற்கு மிகச்சிறியது | நேரான மாய பிம்பம் |
ஈறிலாத் தொலைவிற்கும் ஆடி மையத்திற்கும் இடையில் | \(P\)க்கும் \(F\)க்கும் இடையில் | சிறியது | நேரான மாய பிம்பம் |
அட்டவணை 1 - குவி ஆடியில் தோன்றும் பிம்பம்