PDF chapter test TRY NOW

குழி ஆடிகளால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்கள்:
 
குழி ஆடிகள் மெய் பிம்பங்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றைத் திரையில் பிடிக்க இயலும். குவி ஆடிகளைப் போல் அல்லாமல், குழி ஆடிகள் வெவ்வேறு வகையான பிம்பங்களைத் தோற்றுவிக்கின்றன.
  
80-2.jpg
குழி ஆடி
 
குழி ஆடிகளால் தோற்றுவிக்கப்படும் பிம்பத்தின் நிலை, அளவு மற்றும் தன்மை அதன் முன் வைக்கப்படும் பொருளின் இடத்தைப் பொருத்து இருக்கும்.
 
குழி ஆடியை நோக்கி பொருள் ஒன்று வரும் போது அதன் பிம்பம் பெரிதாகிக் கொண்டே செல்லும். பொருளானது ஆடிமையத்தை அடையும் போது பிம்பத்தின் அளவானது பொருளின் அளவிற்குச் சமமாக இருக்கும். பொருளானது ஆடியை விட்டு விலகிச் செல்லச் செல்ல பிம்பத்தின் அளவானது சிறியதாகி இறுதியில் முக்கியக் குவியத்தில் தோன்றுகிறது. பொருளானது ஈறிலாத் தொலைவிற்குச் செல்லும்போது அதன் பிம்பமானது முக்கியக் குவியத்தில் ஒரு புள்ளி போன்று தோன்றும்.
 
குழியாடியில் தோன்றும் பிம்பங்களின் தொகுப்பானது அட்டவணை 2 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
பொருளின் நிலை
பிம்பத்தின் நிலை
பிம்பத்தின் அளவு
பிம்பத்தின் தன்மை
ஈறிலாத் தொலைவில்
\(F\) இல்
மிகச் சிறியதுதலைகீழான மெய் பிம்பம்
\(C\) க்கு அப்பால்\(C\) க்கும் \(F\) க்கும் இடையில்சிறியதுதலைகீழான மெய் பிம்பம்
\(C\) இல்\(C\) இல்பொருளின் அளவு இருக்கும்தலைகீழான மெய் பிம்பம்
\(C\) க்கும் \(F\) க்கும் இடையில்\(C\) க்கு அப்பால்பெரியதுதலைகீழான மெய் பிம்பம்
\(F\) இல்ஈறிலாத் தொலைவில்மிகப்பெரியதுதலைகீழான மெய் பிம்பம்
\(F\) க்கும் \(P\) க்கும் இடையில்ஆடிக்குப் பின்னால்பெரியதுநேரான மாய பிம்பம்
அட்டவணை 2 - குழி ஆடியில் தோன்றும் பிம்பம்
 
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து குழி ஆடி எப்போதும் தலைகீழான, மெய்பிம்பத்தையே உருவாக்குகிறது என்பதை அறியலாம். பொருளானது குவியத்திற்கும், ஆடி மையத்திற்கும் இடையில் வைக்கப்படும் பொழுது மட்டும் நேரான மாயபிம்பத்தை உருவாக்குகிறது என்பதை நீங்கள் காண முடியும்.
 
80-3.jpg
பொருளானது \(C\) க்கு அப்பால் இருக்கும் போது
 
80-4.jpg
பொருளானது \(C\) இல் இருக்கும் போது
 
80-5.jpg
பொருளானது \(C\) க்கும் \(F\) க்கும் இடையில் இருக்கும் போது
 
80-6.jpg
பொருளானது \(F\) இல் இருக்கும் போது
 
80-7.jpg
பொருளானது \(F\) க்கும் \(P\) க்கும் இடையில்இருக்கும் போது