
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒளி என்பது ஒரு வகை ஆற்றல். அது நேர்க்கோட்டில் செல்லக்கூடியது. சமதள ஆடிகளைப் போன்ற பளபளப்பான பொருட்களில் எவ்வாறு ஒளி எதிரொளிக்கிறது என்பதனை நீங்கள் கீழ் வகுப்புகளில் பயின்றுள்ளீர்கள். ஒளியின் இந்த எதிரொளிக்கும் பண்பு நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களின் செயல்பாட்டிற்கு அடிப்படையாக உள்ளது.
இந்தப் பாடத்தில், கோளக ஆடிகள் மற்றும் பரவளைய ஆடிகள் போன்ற பல்வேறு ஆடிகளைப் பற்றி படிக்க இருக்கிறீர்கள். மேலும், ஒளி எதிரொளிப்பு விதிகள், ஒளி விலகல் விதிகள் மற்றும் இந்த விதிகளின் அடிப்படையில் செயல்படும் பெரிஸ்கோப், கலைடாஸ்கோப் போன்ற ஒளியியல் கருவிகளைப் பற்றியும் படிக்க இருக்கிறீர்கள்.
ஆடிகள்:
நம் அன்றாட வாழ்க்கையில் ஆடிகள் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக, நம்மை அழகுபடுத்துவதற்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம்.
இது ஒரு ஒளியியல் சாதனமாகும், இந்த சாதனம், இதில் விழும் ஒளியை எதிரொளிக்கும் பளபளப்பான மேற்பரப்பைக் கொண்டுள்ளது.
ஒரு வழக்கமான ஆடி என்பது பிம்பத்தினை உருவாக்க ஒரு பக்கத்தில் அலுமினியம் அல்லது வெள்ளியால் பூசப்பட்ட கண்ணாடித் துண்டு ஆகும்.

ஆடிகள்
ஆடிகள், சமதள அல்லது வளைந்த மேற்பரப்பைக் கொண்டுள்ளவை.
வளைவு ஆடிகள், கோள, உருளை, பரவளைய மற்றும் நீள்வட்ட வடிவங்களில் மேற்பரப்புகளைக் கொண்டுள்ளன. பிம்பமானது ஆடியின் வடிவத்தால் தீர்மானிக்கப்படுகிறது. சமதள ஆடிகள் ஒரு பொருளின் சரியான பிம்பத்தினை உருவாக்குகின்றன. அதே நேரம் வளைவு ஆடிகள் பெரிதாக்கப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குகின்றன.
Important!
உங்களுக்கு தெரியுமா?
\(16\) ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டிலுள்ள வெனிஸ் நகரத்தில் கண்ணாடித் தகட்டின் மீது எதிரொளிக்கும் உலோகத்தை மெல்லிய படலமாகப் பூசும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. அவர்கள் பாதரசம் மற்றும் வெள்ளி கலந்த உலோகக்கலவையினை இதற்குப் பயன்படுத்தினர். தற்காலத்தில், கண்ணாடித் தகட்டின் மீது உருகிய அலுமினியம் அல்லது வெள்ளி உலோகத்தினை மெல்லிய படலமாகப் பூசி, ஆடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.