PDF chapter test TRY NOW
ஓர் இருட்டறையில் நீங்கள் நுழையும் போது, அங்கு இருக்கும் பொருள்கள் உங்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை.
மின்விளக்கு ஒன்றினை நீங்கள் ஒளிரச் செய்யும் பொழுது, அறையில் உள்ள பொருட்களை உங்களாலஂ காண இயலுகிறது.
நம்மால் பொருள்களை எவ்வாறு காண முடிகிறது?
நீங்கள் இப்புத்தகத்தை (மேலே உள்ள படத்தில் உள்ள படி) பார்க்கும்போது, புத்தகத்தின் மீது விழும் ஒளியானது, பிரிதிபலிக்கப்பட்டுப் பின் உங்கள் கண்களை வந்தடைகிறது. ஒளி என்பது, நம்மைச் சுற்றி உள்ள அனைத்தையும் காண உதவும் ஆற்றலின் ஒரு வகையாகும்.
ஒளியை நம் கண்கள் கண்டுணர்ந்து கொள்கின்றன. நம் பார்வைக்கு ஒளி என்பது மிகவும் அவசியம்.
கண்ணுறு ஒளி:
ஒளி அல்லது கண்ணுறு ஒளி என்பது மின்காந்த நிறமாலையின் புலப்படும் பகுதியைக் குறிக்கிறது: மனிதர்களின் பிரகாசம் மற்றும் வண்ண உணர்வைத் தூண்டும் அலைநீளங்களின் வரம்பு.
பொதுவாக, மனிதக் கண்கள் \(380\) முதல் \(700\) நானோமீட்டர் வரையிலான அலைநீளங்களைக் காண முடியும். இந்த அலைநீளங்களின் வரம்பு கண்ணுறு ஒளி என்று அழைக்கப்படுகிறது.
கண்ணுறு ஒளி பட்டை
ஊதா நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது. சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டது. குறிப்பிட்ட ஓர் அலைநீளம் கொண்ட நிறம், நம் கண்ணின் விழித்திரையை அடையும் போது, நம் மூளை அந்நிறத்தை உணர்ந்து கொள்கிறது.
Reference:
https://pixahive.com/photo/window-of-a-dark-room/
https://upload.wikimedia.org/wikipedia/commons/6/62/Dark_room.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/6/62/Dark_room.jpg