PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பசுமையான மரங்கள் மற்றும் செடிகள் அடங்கிய உயரமான மலைகள், மேகங்களைத் தொடும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் அழகான மரங்கள், பள்ளத்தாக்குகளில் ஓடும் அழகான நீரோடைகள், கடற்கரையை நோக்கி ஆர்ப்பரிக்கும் நீல நிற கடல் நீர், பொன் சிவப்பு நிறத்தால் நிரம்பிய காலையின் ஒளிரும் வானம் அனைத்தும் நம் கண்களுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகின்றன.
 
10-1.jpg
மரங்கள் மற்றும் செடிகள் அடங்கிய உயரமான மலை
 
ஆனால், அவற்றையெல்லாம் ஒளியில்லாமல் நம்மால் பார்க்க முடியுமா?
 
இல்லை.
 
ஏனென்றால், பொருளால் வெளிப்படும் அல்லது பிரதிபலிக்கும் ஒளி நம் கண்களை அடையும் போது மட்டுமே, நம்மைச் சுற்றியுள்ள பொருட்களைப் பார்க்க முடியும்.
 
ஒளி இல்லாமல் பார்வை இருக்காது. மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் காட்சித்திறன் ஒளி, கண்கள் மற்றும் மூளையின் சிக்கலான தொடர்புகளின் விளைவாகும். .
 
ஒளி என்றால் என்ன?

ஒளி என்பது ஒரு நேர்க்கோட்டில் பயணித்து, பொருளைப் பார்க்க உதவும் ஆற்றலின் ஒரு வடிவமாகும்.
 
சூரியன் போன்ற மூலங்களிலிருந்து ஒளி வெளிப்படுகிறது. ஒரு பொருளின் மீது ஒளி படும் போது, ​​அந்த ஒளியின் பகுதி அந்தப் பொருளின் மீது பட்டு எதிரொளித்து நமது கண்களை அடைவதால் தான், நம்மால் அந்தப் பொருளைக் காண முடிகிறது.
 
ஒளியின் பண்புகள்:
  • இது ஆற்றலின் ஒரு வடிவம்.
  • இது நேர்க்கோட்டில் பயணிக்கிறது.
  • ஒளி நிழல்களை உருவாக்கும்.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Tundra_landscape_with_trees,_clouds,_mountains_and_lens_flare,_Ivvavik_National_Park,_YT.jpg