PDF chapter test TRY NOW

எளிய கலைடாஸ்கோப்பை உருவாக்குவதறஂகான செயல்பாடு இந்தக் கோட்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
 
தேவையான பொருட்கள்:
  • சமதளக் கண்ணாடிப் பட்டைகள் (\(3\))
  • அட்டை
  • கத்தரிக்கோல்
  • வண்ண வளையல்களின் உடைந்த துண்டுகள்
  • வெளிப்படையான டேப்
  • வண்ணத்தாள்கள்
செயல்முறை:
  • மூன்று சமதளக் கண்ணாடிப் பட்டைகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஒரு சமபக்க முக்கோண வடிவில் அமைக்கவும்.
  • அதன் பக்கங்களை அட்டைத்தாளைக் கொண்டு மூடவும்.
  • அதைப்போலவே அடிப்பகுதியையும் மூடவும்.
  • வளையல் துண்டு, மணி போன்ற வண்ணமயமான பொருள்களை உள்ளே போடவும்.
  • இப்பொழுது மேற்பகுதியை அட்டைத்தாளைப் பயன்படுத்தி மூடி, உள்பகுதியைப் பார்ப்பதற்கு ஏதுவாக ஒரு சிறு துவாரத்தினை மேற்புறம் இடவும்.
  • இதனை கவரக்கூடிய பொருளாக மாற்ற அழகான வண்ணத்தாளைக் கொண்டு சுற்றிலும் ஒட்டவும்.
140-1.jpg
  • இப்பொழுது மெதுவாக, அதைச் சுற்றிக்கொண்டே துவாரத்தின் வழியாக உட்புறத்தினைப் பார்க்கவும்.
  • ஓர் அழகான வடிவத்தை உங்களால் காணமுடியும்.
140-2.jpg
Important!
எச்சரிக்கை: கண்ணாடித் துண்டுகளைக் கவனமாகக் கையாளவும். ஆசிரியரின் மேற்பார்வையில் இந்த செயல்பாட்டினைச் செய்யவும்.